துயரத்தோடும்
கோபத்தோடும் ஒரு தோழர் ஒரு காணொளியை அனுப்பி இருந்தார்.
இதய
பலவீனம் உள்ளவர்கள், இளகிய உள்ளம் கொண்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் இந்த காணொளியை கண்டிப்பாககாண வேண்டாம்.
அந்த காணொளியை இன்னுமொரு முறை காணும் மன வலிமை இல்லாததால் டெலிட் செய்து விட்டேன். இந்த படத்தை மட்டும் கூகிள் துணை கொண்டு எடுத்துக் கொண்டேன்.
கொரோனாவால்
மரணமடைந்த ஒருவரை மிகவும் மோசமான முறையில் அடக்கம் செய்கிறார்கள் .
செத்த
எலியை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவதைப் போல ஒரு செயல்.
மனிதன்
வாழும் போது அனுபவிக்கிற கொடுமை, அவன் இறந்த பின்பும் தொடர்கிறது
இந்த
அவலம் நடந்தது புதுச்சேரியில்.
உயிர்
பயம் இருக்கலாம். அதற்காக இப்படியா?
அந்த
மனிதனுக்கு வாழும் போது மரியாதை கிடைத்ததா என்பது தெரியாது. ஆனால் “இறுதி மரியாதை”
நிச்சயமாக இல்லை.
யானைக்காக மட்டும் குரல் கொடுத்தவர்கள் யாராவது இந்த மனிதனுக்காக மனம் இரங்கியிருப்பார்களா?
No comments:
Post a Comment