மிகுந்த கோபத்துடன்தான் தமிழக ஆட்சியாளர்களையும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கிற மாலன் போன்ற கேடு கெட்ட வார்த்தை வணிகர்களையும் ஒருமையுடனான வார்த்தைகளில் திட்டுகிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக சொன்ன காரணம் போன்ற அயோக்கியத்தனம் ஏதுமில்லை.
வருங்காலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு போகும் என்பதால் இப்போது நடத்த வேண்டும்.
வருங்காலத்தில் உச்சத்திற்கு போகுமென்றால் அதற்குக் காரணம் நிகழ் காலத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கிற தளர்வுகள்தான்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தால் இன்னும் முன்னதாகவே பரவல் உச்சத்திற்கு போகத்தான் வழி வகுக்கும்.
இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு அனைத்து மாணவர்களையும் பதினொன்றாவதிற்கு அனுப்பினால் என்ன தவறு!
95 % மாணவர்கள் ஏற்கனவே செல்கின்றார்கள். அது சரியல்ல என்று ஒரு கிறுக்கன் சில வாரங்கள் முன்பு சொன்னான். என்ன இந்த வருடம் கூடுதல் 5 % செல்லப் போகிறார்கள். அவ்வளவுதானே!
பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து கல்லா கட்டும் கல்வி வியாபாரிகளின் கொள்ளை தொடர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கிறது?
கோபத்தோடு சொல்கிறேன்.
நீங்க எல்லாம் கொரோனா வந்து அழிஞ்சுதாண்டா போகப் போறீங்க.
No comments:
Post a Comment