Saturday, June 20, 2020

இப்போதாவது உண்மை பேசுங்கள் மோடி




நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  

“இந்தியாவுக்குள் யாரும் ஊடுறுவவில்லை. எந்த இந்திய ராணுவ போஸ்டையும் யாரும் கைப்பற்றவில்லை”

என்று மோடி ஆணித்தரமாக கூறியுள்ளார்.

பின்பு நம் ராணுவ வீரர்கள் இருபது பேர் எப்படி இறந்தார்கள்?

“பீகாரி ரெஜிமெண்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் வீர மரணம் மூலம் நாட்டிற்கு தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள்”

என்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நீங்கள், அவர்கள் வீர மரணம் நிகழ்ந்தது எப்படி என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?

உங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இந்தியாவின் எல்லையை, இந்தியாவின் கௌரவத்தை, இந்திய வீரர்களின் உயிரை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்போம் என்று “சீனக்கைக்கூலிகள், சீன அடிமைகள்” என்று உங்கள் அல்லக்கைகளால் திட்டப்படும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஒத்துழைப்போம் என்று உறுதியளித்த பின்பும் மௌனம் ஏன்?

உங்கள் மௌனத்திற்கு இரண்டு விதமான அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து இந்திய வீரர்களை கொன்றது என்பதை ஒப்புக் கொண்டால் “56 இஞ்ச் மார்பர்” என்று நீங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்ட பில்ட் அப் சுக்கு நூறாக தகர்ந்து நீங்கள் பலவீனமானவராக காட்சியளிக்கும்  பரிதாபத்தை தவிர்க்க மௌனமாக உள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்ளப்படும்.

அல்லது

நம் வீரர்கள் சீன எல்லைக்குள் நுழைந்ததால் கொல்லப்பட்டார்களா?

நீங்கள் உண்மையைச் சொல்லாவிட்டால் இது போன்ற விபரீதக் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது.

போரைத் தவிர்ப்பதற்கான ராஜ தந்திர நடவடிக்கை என்று ஒரு வேளை சொன்னாலும் அது சரியல்ல.

தயவு செய்து இப்போதாவது உண்மை பேசுங்கள்

உங்களுக்கு அது சிரமம்தான்.

ஆனாலும்

பேசுங்கள்


No comments:

Post a Comment