சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்தால் அதை மீட்க வேண்டும். போர் என்று வந்தால் அது இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்காக வர வேண்டும். மோடியின் அரசியல் ஆதாயத்திற்காக இந்திய வீரர்களின் உயிரோடு ஆட்சியாளர்கள் விளையாடக் கூடாது.
வீர தீர மோடி மகராஜ், இன்னும் வாய் திறக்கவில்லை. ராஜ்நாத் சிங் ட்வீட் எதிலும் சீனாவை கண்டிக்கவில்லை. இந்திய வீரர்கள் எப்படி இறந்தார்கள் என்று கூட சொல்லவில்லை.
ஹெச்.ராசா, மாலன், மாரிதாஸ் போன்ற . . . . .. . . . . .. களின் பேச்சைக் கேட்டு பொங்குபவர்கள் கீழே உள்ள இரண்டு செய்திகளைப் பார்த்து விட்டு அதற்காகவும் பொங்கவும்.
1. புதுதில்லி மீரட் அதிவிரைவு வேக ரயில் போக்குவரத்திற்கான சுரங்கம் அமைக்க 1126 கோடி ரூபாய்க்கான டெண்டரை ஷாங்காய் டன்னல் எஞினியரிங் லிமிடெட் Shanghai Tunnel Engineering Limited என்னும் சீன நிறுவனம் இரண்டு நாளுக்கு முன் பெற்றுள்ளது.
2. மகராஷ்டிராவில் 7500 கோடி முதலீட்டில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் மகராஷ்டிரா அரசுக்கும் சீனத்தின் கிரேட் வால் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே நேற்றைக்கு முன் தினம் கையெழுத்தாகி உள்ளது.
எல்லையில் பதட்டம் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக நீடிக்கிறது. இந்த நிலையிலும் சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கிறார்கள்.
இதுதான் மோடி வகையறாக்களின் உண்மையான தேஷ் பக்தி.
பொங்குகிற தேச பக்தர்கள், கம்யூனிச சீனாவுக்கு ஒப்பந்தம் அளித்த மோடி வகையறாக்களுக்கு எதிராகவும் பொங்குங்கள்.
Bsnl 4g order has been cancelled..meerut order also would be cancelled soon.. Maharashtra china car company going to make plant .wat is the deal here..we shld ignore mg Hector cars.
ReplyDeleteஐயோ பாவம், குழந்தைப் புள்ளையா இருக்கீங்க!
Deleteஉங்களை மாதிரி ஆளுங்களுக்கு தாங்கள் ஏமாற்றப்படுவதே புரியாது.
இந்த மூடத்தனம்தான் மோடியின் மூல தனம்