Wednesday, June 3, 2020

நாக்பூரிலிருந்து ஒரு வாழ்த்து

ஓய்வு பெற்ற மூத்த தோழரும் எழுத்தாளருமான நாக்பூரில் வசிக்கிற தோழர் காஷ்யபன், "முற்றுகை" நூல் குறித்து முக நூலில் எழுதியிருந்தார். 

தோழரின் வாழ்த்து மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அப்போராட்ட காலத்தில் பணியில் இருந்தவர் என்பதால் அவரது செய்திக்காக காத்திருந்தேன். கொரோனா காலம் என்பதால் புத்தகம் அவரை சென்றடைய கால தாமதமாகி விட்டது.

புத்தகத்தை படித்து முடித்த பின்பு நேற்று முன் தினம் இரவு தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய தோழர் காஷ்யபன், நேற்று முக நூலிலும் அதனை பதிவு செய்துள்ளார்.





தீரமிக்க எல்.ஐ.சி
ஊழியர்களின் ,வரலாறுதான்
"முற்றுகை " என்ற புதினம் ...!!!


It is in the high sea! 
At any moment it will reach kalkatta port. 
No power on earth can stop it "

என்று கர்ஜித்தார் எல்.ஐ.சி யின் சேர்மனாக இருந்த M.R. BIDE .ஓராண்டு க்கு பிறகு கப்பற்படைக்கு சொந்தமான Fort Williams கோட்டையின் ஒதுக்கலான அறையொன்றில் வங்கக்கடலின் ஈரக்கற்றில் துரு ஏறி கிடந்தது அந்த கம்ப்யூட்டர். 

இதனை சாதித்தவர்கள் மேற்கு வங்கத்தின் விவசாயிகள், கூலிகள், கை ரிக்சாக்காரர்கள், டிராம்வே  தொழிலாளர்கள், மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள்,  எல்.ஐ .சி ஊழியர்கள் ஆகியோர்.

எல்.ஐ.சி நிறுவனத்தை இயந்திரமயமாக்கும் திட்டத்தை மறுசீரமைப்பு (reorganization) என்று கபடமாக கூறி கொண்டுவந்தார்கள் நிர்வாகத்தினர் 1965 ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது அமலாக்கிய அவசர நிலைமையை பயன்படுத்தி பம்பாயில் கம்பியூட்டரை நிறுவினார்கள் அடுத்ததாக இதனை கல்கத்தாவில் கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன.

மறுசீரமைப்பு திட்டத்தின் உள்நோக்கத்தை அலசி ஆராய்ந்த தோழர் திண்டுக்கல் நாராயணன் அதனை எதிர்க்க வேண்டிய அவசியத்தை புலப்படுத்த தரவுகளை சேகரித்து வந்தார் .

நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்களை அமெரிக்க முதலாளிகள் வைத்திருந்தனர். இந்த ஆப்பிள் மரங்களை பண்டுவும் பார்த்து, கனிந்த பழங்களை பறித்து தோல் சீவி சாறாக்கி டப்பாக்களில் பதப்படுத்தி தயார் செய்ய ஏராளமான கூலி தொழிலாளர்களை வைத்திருந்தனர் பண்ணை முதலாளிகள் இதனை மாற்றி டயர் வண்டி களில் பிரும்மாண்டமான இயந்திரங்களை வைத்து அவற்றின் மூலம் இந்தப்பணிகள் செய்ய ஆரம்பித்தனர். ஓராண்டில் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் இல்லாமல் போயினர்.அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமல் போயிற்று 

.இது பற்றி டைம்ஸ் பாத்திரிகையில் வந்த கட்டுரையை படித்த நான் மதுரை வந்திருந்த திண்டுக்கல் நாராயணன் அவர்களிடம் கூறினேன்.
மதுரையிலிருந்து பிரிந்த தஞ்சை பகுதிக்கும் தலைவராக அப்போது நாராயணன் இருந்தார். தஞ்சையின் தானைத் தளபதியான  ஆர்.கோவிந்தராஜன் மூலம் நாராயணன் அவர்கள் அகில இந்தியத் தலைமைக்கு மறுசீரமைப்பு திட்டத்தின் கேடுகளை கொண்டுசென்றார்.

அகிலஇந்திய தலமை இதனை விவாதித்தது. கல்கத்தாவில் இலாக்கோ கட்டிடத்தில் வரவிருக்கும் கம்ப்யூட்டரை வரவிடாமல் தடுப்பது என்று முடிவாகியது. 

"இலாகோ விஜில் " என்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

வெல்லூர் தோழர் ராமன் அவர்கள் கல்கத்தா சென்று 1965ம் ஆண்டு நடந்த இந்தப்போராட்டம் பற்றிய தரவுகளை சேகரிக்க ஒரு வாரம் கல்கத்தாவில் தங்கினார். போராட்டத்தை சரோஜ், சுனில் போஸ் ஆகிய மூவர் தலைமை தாங்கி நடத்தினர். சுனிலும், சரோஜும் மறைந்த நிலையில் முதியவர் சந்திர சேகர போஸ் அவர்களை சந்தித்து ஏராளமான தகவல்களை ராமன் அவர்கள் சேகரித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் படைத்த  புதினம் தான்"முற்றுகை' என்ற நாவலாக வந்துள்ளது.

முற்றுகை நாவலா?ஆம்.வரலாறா?ஆம். நிஜமும் கற்பனையும் கலந்த அற்புதமான புனைவு ஒன்றை ராமன் தந்திருக்கிறார்.அசோக் பானர்ஜி-ஆஷா வின் மெல்லிய காதல்-

"இலாகோவிஜில்" என்பது போராட்டமாக இல்லாமல் ஊழியர்களுக்கு கற்றுக் கொடுக்கும் களமாக மாற்றியதை அருமையாக சொல்கிறார். பழைய ஊழியர்களுக்கு, நிர்மல் சென், அசோக் பானர்ஜி என்ற பாத்திரங்கள் முகுல் முஸ்தாவியையும், பிரத்யோத் நாக் அவர்களையும் நினைவில் கொண்டு வருகின்றன. 

மாநாடுகளில் வரும் இளம் சார்பாளர்களை சுண்டி பார்த்து தலைமைக்கு அடையாளம் காட்டுவதில் முகுல்முஸ்தாவி ஒரு ராட்சசன். வரும் இளைஞர்களை அன்பாக பேசி மயக்குவதில் பிரத்யோக நாக் ஒரு intellectual  Giant .

கம்பியூட்டரை எதிர்த்தது கடுமையான போராட்டங்களை நடத்திய சங்கம் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டது ராமன் கூறுகிறார்.

Too much automation kills employment.!
Too little automation kills organization !!

என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் எல்.ஐ சி ஊழியர்களின் சங்கமாகும்.

தோழர் ராமன் அவர்கள் ஒரு உன்னதமான வரலாற்றினை படைத்து கொடுத்திருக்கிறர்கள். இந்த நூல் பல்வேறு இந்திய மொழிகளில் வர வேண்டும்.

வாழ்த்துக்கள் ராமன் அவர்களே !!!

2 comments:

  1. Memorable worthy appreciation from comrades who have witnessed the struggle.we too appreciate on the basis of presentation.but they are capable of pointing out any deviation or exaggeration. I too find this as an opportunity to appreciate again.

    ReplyDelete