பரபரப்பான விஷயங்களை வணிகத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்நாட்டிற்கு ஈடு இணை யாருமே கிடையாது.
ஒரு மாதத்திற்கு முன்பே கொரோனா டிசைன் சேலை வந்தது.
இப்போது கொரோனா தோடு.
அடுத்து கொரோனா நெக்லஸ் வந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
கொரோனா குறித்த கவலை மக்களிடம் குறைந்து கொண்டே இருக்கிறது.
தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்தான்
முகக் கவசம் அணிவதும் தனி நபர் இடை வெளியை கடை பிடிப்பதும் குறைந்து கொண்டே இருக்கிறது.
இந்த விதிகளை கடை பிடிக்காதவர்களை "வெண் முரசு" படிக்கச் செய்வோம் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
அப்போது கட்டுப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
14 நாட்கள் குவாரண்டைனை விட மிகப் பெரிய தண்டனையல்லவா அது?
No comments:
Post a Comment