பட்டப்பகலில்
சி.சி.டிவி படம் பிடிக்க நடந்த கொடூரக் கொலை. பெற்ற மகளை விட ஜாதியே பிரதானம் என்று கருதிய வெறியர்கள் நிகழ்த்திய
ஆணவக் கொலை.
மாவட்ட
நீதி மன்றம் சரியான தீர்ப்பளித்தது.
உயர்
நீதி மன்றமோ, கொலையை நிகழ்த்திய படுபாவிகளுக்கான மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து
தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்திக் கொண்டது.
கொலை
செய்ய கூலிப்படையை ஏவிய கௌசல்யாவின் பெற்றோர்களை விடுதலை செய்து விட்டு நீதிமன்றம் தன்னை கருணை ஆலயமாகவே மாறி விட்டது.
என்ன!
சங்கருக்கான நியாயத்தை மறுத்ததன் மூலம் சங்கர் இன்று இரண்டாவது முறையாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை
செய்தவர்களை விட கொலை செய்ய தூண்டியவர்களே மிகப் பெரிய குற்றவாளிகள் என்பதெல்லாம் இப்போது
சட்டப் புத்தகத்தின் சிலபஸ்ஸில் கிடையாது போல
சங்கர்
கொலையான சமயத்தில் கௌசல்யாவின் ஒரு வாக்குமூலத்தை திரு எவிடென்ஸ் கதிர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
சில
வருடங்களுக்கு முன்பாக பகிர்ந்து கொண்டதை இந்த இணைப்பு மூலம் நீங்கள் படியுங்கள்.
அந்த
வாக்குமூலம் இன்று தீர்ப்பளித்தவர்களுக்கு சமர்ப்பணம்.
உயர்
நீதிமன்றம் பற்றி எச்.ராசா சொன்னது சரிதான் என்று நம்மையும் நினைக்க வைத்ததுதான் இன்றைய
தீர்ப்பின் சாதனை.
No comments:
Post a Comment