Monday, June 8, 2020

கட்டிலோடு கட்டி வைத்த மருத்துவமனை



ஆம், ஷாஜாபூர் என்றொரு ஊர்.
மத்தியப் பிரதேச மாநிலம்.
கொரோனா காலத்தில் கூட குதிரை பேரம் நடத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றிய மாநிலத்தில் இருக்கி ஒரு ஊர்.

அங்கே ஒரு மருத்துவ மனை.
தனியாருக்கு சொந்தமானது.

வயிற்று வலிக்காக ஒரு எண்பது வயது முதியவரை சேர்க்கிறார்கள். ஆறாயிரம் ரூபாய் வரை பணம் கேட்கிறார்கள். உறவினர்கள் கட்டி விட்டார்கள். பெரிய அளவில் ஒன்றும் சிகிச்சை தரப்படவில்லை. ஆனாலும் அவர் குணமாகி விட்டார்.

இன்னமும் பணம் வேண்டும், கட்டுங்கள், அப்போதுதான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்று சொல்கிறார்கள்.

எங்களிடம் பணம் இல்லையே என்று உறவினர்கள் கெஞ்சுகிறார்கள்.
நாங்கள் வீட்டுக்குப் போகிறோம், அனுமதியுங்கள், கொடுத்த பணத்திற்கே நீங்கள் ஒன்றும் செய்யாத போது இன்னும் ஏன் கட்ட வேண்டும் என்று நியாயத்தை கேட்கிறார்கள்.

மருத்துவமனை நிர்வாகம் ஒரு நிமிடம் யோசித்தது.

முடிவெடுத்தது.

அந்த முதியவரின் கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டிப் போட்டு அப்படியே கட்டிலோடு கட்டிப்போட்டு விட்டது.



நாங்கள் சொன்ன பணத்தை கட்டி விட்டு பிறகு விடுவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டது.

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஏனென்றால் இதுதான் தனியாரின் குணாம்சம்.

இப்படிப்பட்ட தனியாருக்குத்தான் மோடி அரசு தலை வாழை இலை போட்டு இந்தியாவை விருந்து வைத்துக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment