உங்களின் உற்ற நண்பர் அவர். இன்னும் சொல்லப் போனால் உங்களின் அமெரிக்கப் பிரதி அவர். உங்களை அவரின் இந்தியப் பிரதி என்றும் சொல்லலாம்.
அறியாமை,
ஆணவம்,
தரகு வேலை,
வன்மம்,
எளியோரை எள்ளி நகையாடுவது,
கொடூரம்,
சுய விளம்பரம்
ஆகியவற்றில் உங்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அவருக்கு அமெரிக்க ஆப்பிரிக்கர்களை நிறத்தின் அடிப்படையில் பிடிக்காது.
உங்களுக்கு இஸ்லாமியர்களை மதத்தின் அடிப்படையின் பிடிக்காது.
நீங்கள் இருவருமே ஒரே நாற்றமடிக்கும் குட்டையில் மூழ்கிப் போன மட்டைகள்.
அமெரிக்க ஆப்பிரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட, அந்த அராஜகத்தை காணொளி மூலம் பார்த்த மக்கள் கொதித்தெழ, அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தீ வெள்ளை மாளிகை வரை வந்திட உங்கள் நண்பரை பாதுகாப்பாக இருக்க பதுங்கு குழிக்குள் அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய வல்லரசு என்று அழைக்கப்படும் நாட்டின் அதிபருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் நிகழ வெகு நாட்கள் ஆகாது.
ஆறாண்டு காலத்தில் நீங்கள் செய்யாத அக்கிரமா?
உங்கள் கட்சிக் குண்டர்கள் செய்யாத கொலைகளா?
உங்கள் ஆட்சியின் அறிவற்ற முடிவுகளால் இழந்த உயிர்கள் எத்தனை?
உங்களின் கொடிய கரங்கள் எத்தனை மாணவ/மாணவிகளின் மண்டைகளை உடைத்திருக்கிறது?
பசியால் அழும் பாலகர்களுக்கு பதில் என்ன?
அடக்குமுறைச் சட்டங்களை ஏவி சிறையில் வாடுவார் எண்ணிக்கை எவ்வளவு?
தரகு வேலை பார்க்க, செல்வத்தை விற்கும் மனசாட்சி அற்ற மனிதன் அல்லவா நீர்?
தயாராக இருங்கள்.
உங்கள் இல்லத்திலும் பதுங்கு குழியை தயார் செய்யுங்கள்.
அங்கே ஒளிந்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் அமெரிக்க நண்பரை விட அராஜகவாதியான உங்களை மட்டும் மக்கள் மன்னித்து விடுவார்களா என்ன?
#bunkerboy, #feku hope these neo hitlers meet the same fate as hitler in their own bunkers.
ReplyDelete