முந்தைய பதிவில் ஜெமோவுக்கு நெருக்கமான ஒரு பெரியவர், அவருக்கு ஆலோசனை கூறியதாக எழுதியிருந்தேன்.
அவர் திரு பாரதி மணி, நாடக, திரைக் கலைஞர். எண்பது வயதைக் கண்ட அனுபவஸ்தர், பாபா, புதுப்பேட்டை படங்களில் முதல்வராக நடித்தவர்.
அவர் எழுதியது கீழே
Let Sanity prevail!
பாவம் ஆசான்!
ஏற்கனவே பலர் பொங்கல் வெச்சு கும்மியடிக்கிறாங்க! கொஞ்சம் அமைதி காத்திருக்கலாம். திருநாவுக்கரசருக்கு அஞ்சு வயசிலெ நடந்தது தனக்கு ஒண்ணாங்கிளாசிலெ நடந்தது என்று வாயைக்குடுக்க, மக்கள் கர்ப்பஸ்ரீமான் மாதிரின்னு ஸ்க்ரிப்ட் எழுதறாங்க. இதெல்லாம் தேவையா? இப்படி எழுதுபவர்கள் எல்லோருமே உங்கள் வாசகர்கள்.....நண்பர்கள்!
நீ உன் ஏரியாவில் பெரியவன்
தான். உன் படைப்புகள் சாட்சி.
உன் சக எழுத்தாளர்களே வியக்குமளவுக்கு மாபெரும் சாதனை!
அவைகள் பேசட்டுமே.
தேவையில்லாமல் முதற்கல்
ஏன் எறியவேண்டும்? என் விஷயத்திலும் இது நடந்திருக்கிறது. நான் பொருட்படுத்தவேயில்லை. நீ இன்னும்
யாருக்கு என்ன நிரூபிக்கவேண்டும்? இருக்கும் ஒரு வண்டி கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ளத்தெரியாமல் சிறுபிள்ளைத்தனம் தலையெடுப்பதை தவிர்க்கவேண்டும். இந்த 'ஆண்டான்- அடிமை'த்தனம் இப்போது காலாவதியாகிவிட்டது.
//‘மாஸ்டர்’
என்பவர் வேறு வகையானவர். அவர்கள்
ஆற்றுவதை, அடைவதை
பிறர் அடையமுடியாது. ஆகவே அந்த ஒப்பீடே அவருக்கான
அவமதிப்புதான். நான் நீங்கள் வாழும்
தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால்
நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை ,நீங்கள் வேறெங்கோ
இருக்கிறீர்கள்.// இவை உங்கள் வரிகள்! So...what? நீங்கள் பிறரிடம்
என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
You're also getting old and need
some sanity! அவ்வப்போது வாயிலகப்படும் சொத்தைக்கடலைகள் இனி வேண்டாம். அது இல்லாமெ சாப்பிடத்தான் எங்களுக்குப்பிடிக்கும்!
உங்கள் சாதனைகளைப்பற்றி சரித்திரம் பேசட்டும்.
ஃபேஸ்புக் பேசவேண்டாம்! இதைச்சொல்ல என் நரைத்த தலை மட்டுமே
எனது தகுதி!
Silence is Golden!
ஆனால் இந்த ஆலோசனையையெல்லாம் செவி மடுக்கிற நல்லறிவு ஜெயமோகனுக்கு கிடையாது என்பதை அவரது திமிர்த்தனமான பதில் காண்பித்து விட்டது.
அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்.
No comments:
Post a Comment