Monday, June 1, 2020

உயிரோடு இருப்பதற்கு சந்தோஷப்படுங்கள்


அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் திருவாளர்கள் ஜே.பி.பர்திவாலா - ஐலேஷ் வோரா ஆகிய இரு நீதிபதிகளின் அமர்வு, கொரோனா தொடர்பான பொது நல வழக்குகளை விசாரித்து வந்தது.

புலம் பெயர் தொழிலாளர்கள் பட்டினி கிடப்பதை அரசு அலட்சியப்படுத்துவது தொடர்பாக கண்டித்த நீதிபதிகள் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் மோசமான நிலைமையை "இருட்டறையை விட கேவலமாக இருக்கிறது" என்று கண்டித்தார்கள்.

அதனால் ஏற்பட்ட விளைவு என்ன?

மருத்துவ மனையை சுத்தம் செய்து வசதிகள் செய்து கொடுத்து விட்டார்களா?

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ரயிலும் பேருந்தும் போதுமான உணவும் குடி நீரும் அரசின் செலவிலேயே செய்து கொடுத்து விட்டார்களா?

பாஜக அரசா நல்லது செய்யும்? என்று கேட்டால் நீங்களும் என்னை போல தேசத்துரோகியே!

ஆனால் ஒரு விளைவு இருந்திருக்கிறது.

கொரோனா தொடர்பான பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மாற்றப்பட்டு விட்டது. அந்த அமர்வில் தலைமை நீதிபதி திரு விக்ரம் நாத் மற்றும் திரு ஜே.பி.பர்திவாலா இருப்பார்கள். முந்தைய அமர்வில் இருந்த திரு ஐலேஷ் வோரா கிடையாது. திரு ஜே.பி.பர்திவாலா இளைய நீதிபதியாகி விட்டார்.

ஆனாலும் இது நல்லதென்று சந்தோஷப்பட வேண்டும்.

ஆமாம்.

நீதிபதி திரு முரளிதர் போல நள்ளிரவில் மாற்றப்படவில்லை.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திருமதி தஹீல் ரமானி போல பதவி விலகும் சூழலுக்கு தள்ளப்படவில்லை.
நீதிபதி லோயா போல கொல்லப்படவும் இல்லை.

ஆம். இப்படி எதுவும் நிகழாததால் சந்தோஷப்படுவது சரிதானே!

No comments:

Post a Comment