திரு பா.செயப்பிரகாசம் பற்றி முதலில் வன்மத்தை வெளிப்படுத்திய போது அதிலே ஒரு வரி இருந்தது.
"சாகித்ய அகாடமி" விருதுக்காக அவர் முயல்கின்றார் என்பது அந்த குற்றச்சாட்டு.
சரி, வழக்கம் போல ஜெமோவின் காழ்ப்புணர்ச்சி என்றுதான் நினைத்தேன்.
அதன் பிறகு பார்த்தால் ஜெமோ மீது கண்டன தீர்மானம் வந்த பிறகு ஜெமோவின் பித்தம் தலைக்கேறியுள்ளது.
அவரது ஜாதி வெறியும் மத வெறியும் மிகவும் அப்பட்டமாகவே அவரது பதிவுகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
தன்னை விமர்சிப்பவர்கள் கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று ஒரு இடத்தில் திட்டுகிறார். இன்னொரு இடத்தில் என் ஜாதி சங்கத்துக்கு குமரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கு தெரியுமா என்று உதார் விடுகிறார்.
பா.செயப்பிரகாசத்தை ஆதரித்து அவர் ஊரின் சட்டமன்ற உறுப்பினர் அறிக்கை விட்டால் அவரது ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்கிறார்.
போதாக்குறைக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொலிட் பீரோ வரை புகார் செய்யப் போகிறாராம்.
அவரை அவதூறு செய்து விட்டார் என்று சொல்லியே ஊரில் இருக்கிற அனைவரையும் அவதூறு செய்து கொண்டே இருக்கிறார். வழக்கம் போல இறந்து போனவர்களை இவரது பொய்களுக்கு சாட்சிக்கு அழைக்கிறார்.
இப்பிரச்சினை தொடர்பான அனைத்து பதிவுகளையும் படித்து நான் புரிந்து கொண்டது ஒன்றுதான்.
ஜெமோ மன நிலை பாதிக்கப்பட்டு விட்டார்.
அவருக்கு உடனடித் தேவை மருத்துவ சிகிச்சை.
அவரது அல்லக்கைகளை அவருக்கு ஜால்ரா அடித்து உசுப்பேத்தி விடுவதை விட மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
ஜெயமோகனுக்கு மன நிலை பாதித்துள்ளது என்று எப்படி சொல்கிறீர்கள்?
ReplyDeleteI will write on tomorrow
Delete