Thursday, September 17, 2020

ஹேப்பி பகோடா ஜீரோ டே!

 


ஹீரோ என்று சங்கிகள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு ஜீரோவின் பிறந்த நாளாம் இன்று.

 “இதற்கு முன்பாக ஆகஸ்ட் 29 என்று சொன்னார்கள், இப்போது செப்டம்பர் 17 என்று சொல்கிறார்கள்” என்று ஒரு தகவல் சுற்றிக் கொண்டிருக்கிறது. சரி பார்க்க அவகாசமில்லாததால் அது பற்றி எதுவும் எழுதவில்லை.

 இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்கில்

 #NationalUnemploymentDay

 என்ற ஹேஷ்டாக் தான் முன்னணியில் உள்ளது.

 வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவோம் என்று ஜூம்லாவிற்காக சொல்லி விட்டு பதவியைப் பிடித்தவரின் ஆட்சிக்காலத்தில்தான் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை பெருகியது என்று மத்தியரசின் புள்ளி விபரமே கூறி இவர் ஒரு வெத்து வேட்டு, வீண் பேச்சுக் காரர் என்பதை நிரூபித்தது.

 கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பனிரெண்டு கோடி பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர். பதினைந்து கோடியாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் சொல்கிறார்.

 போட்டோஷாப் டே, டுபாக்கூர் டே, போட்டோ சீன் டே, புரோக்கர் டே, கில்லர்ஸ் டே என்று பொருத்தமான பல நாட்கள் இருப்பினும்

 இப்படி வேலைகளை காலி செய்து வேலையின்மையை பெருக்குபவரின் பிறந்த நாளை

 #NationalUnemploymentDay

 என்று சொல்வதுதானே பொருத்தம்!

 பகோடா விற்பதுதான் வேலை வாய்ப்பு என்று சொன்ன அதி மேதாவி என்பதால் ஹேப்பி பகோடா ஜீரோ டே என்று என் பங்கிற்கு நான் வாழ்த்துகிறேன்.

 #HappyBakodaZeroDay

1 comment:

  1. ஹேப்பி பகோடா டே

    ReplyDelete