Tuesday, September 22, 2020

வெட்கம் கெட்டு டீ குடிக்கனுமா ????

 




 

மக்களை பாதிக்கும் மசோதா அது.
அதன் மீது நேரடி வாக்கெடுப்பு வேண்டும் என்றார்கள்.
மறுத்தாய்.
தேர்வுக் குழுவுக்கு அனுப்பி விவாதிப்போம் என்றார்கள்.
மறுத்தாய்.
குரல் வாக்கெடுப்பு என்று சொல்லி
நாடாளுமன்ற ஜனநாயகத்தின்
குரல்வளையை நெரித்தாய்.
 
உரிமையை தக்க வைக்க,
மரபை நீடிக்கச் செய்ய
உன்னை சூழ்ந்து கொண்டு
குரல் கொடுத்தவரை
வெளியே துரத்தினாய்.
 
அவப்பெயர் சொல்லி
இடை நீக்கம் செய்தாய்.
 
காந்தி சிலையின் காலடியில்
போராட்டம் துவங்கிய போது
கண்டு கொள்ளாமல் சென்றாய்.
 
காலையில் வந்து தேநீர் கொடுத்தாமல்
வெட்கம் கெட்டுப் போய் அதை
குடிக்க வேண்டுமா?
 
நாடகம் பலிக்காமல் போனதால்
உண்ணாவிரத நாடகம் நடத்தினால்
நல்லவனாகி விடுவாயா என்ன?
 
மோடி வேண்டுமானால் வாழ்த்தலாம்.
மக்கள் மனதில் நீ
என்றுமே ஜனநாயகத்தை
படுகொலை செய்த பாவிதான் , , ,

 

பிகு 1: ஒரு நாளாவது அரசியல் பதிவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பார்த்தால் விட மாட்டேன் என்று மோடி வகையறாக்கள் அடம் பிடித்தால் நான் என் செய்வேன்?

 

பிகு @ : விவசாய் மசோதாவை கண்டித்த மாநிலங்களவை உறுப்பினர்களை இடை நீக்கம் செய்தார்கள். அதைக் கண்டித்து அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இடை நீக்கம் செய்ய வைத்த மாநிலங்களவை துணைத்தலைவர், காலையில் அவர்களுக்கு தேநீர் கொடுப்பது போல ஒரு நாடகத்தை நடத்தப் பார்த்தார். அவர் அளித்த டீயை அவர்கள் மறுத்து விட்டனர். அடுத்த நாடகமாக அவர்கள் தன்னை அவமதித்து விட்டதனால் உண்ணா விரதம் இருப்பதாக அடுத்த நாடகத்தை துவக்கியுள்ளார்.

 

அதெப்படி சங்கிகள் எல்லோருமே சிறந்த நடிகர்களாக இருக்கின்றனர்.

 

 

 

 

 

No comments:

Post a Comment