Thursday, September 17, 2020

தோசத் தலைவராம்






 பாஜக தென்காசி மாவட்டம் போட்டுள்ள ட்வீட் இது. 



முக நூலில் இந்த ட்வீட்டை சிலர் பகிர்ந்து கொண்டதை பார்த்தவுடன், ஒரு வேளை இதனை திருத்தி இருக்கலாம் அல்லது நீக்கியிருக்கலாம் என்று நினைத்தேன். பிழையை திருத்துங்கப்பா என்று சிலர் பின்னூட்டமிட்டும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. நானே எடுத்த ஸ்க்ரீன் ஷாட் இது. 

மேலும் பலரும் தோசத் தலைவர் என்றே ட்வீட் செய்துள்ளனர்.

ஒரு சாதாரண எழுத்துப்பிழை. இதைப் போய் பெரிது படுத்தலாமா என்று கேட்கலாம். சங்கிகளைத் தவிர வேறு யார் கேட்டாலும் அது நியாயமே.

"இந்தி தெரியாது போடா" என்று டிஷர்ட் வாசகம் வந்த போது "தமிழ் தெரியாத காரணத்தால்தான் தங்கிலிஷில் அச்சடித்துள்ளனர்" என்று சங்கிகள் நக்கலடித்தனர். ஆஜானின் பிரதான சிஷ்யை அடித்த கூத்திற்கு அளவே இல்லை. 

அத்தோடு நிற்கவில்லை.

"நீட்" பறித்துக் கொண்ட ஜோதி துர்காவின் கடிதத்தில் பிழை கண்டுபிடித்த பாவிகள் இவர்கள். 

ஊருக்கு உபதேசம் செய்யும் காவிக்கயவர்கள் முதலில் தமிழ் கற்கட்டும். பிறகு இந்தி திணிப்புக்கு வரட்டும். 

1 comment:

  1. தோசத்தலைவர் தோச(ஷ)ம் பிடித்த தலைவர், நாட்டிற்குப் பிடித்த தோசம் என்று பொருள் கொள்ள வேண்டும்

    ReplyDelete