Monday, September 21, 2020

98 வயதிலும் ஆச்சர்யப்படுத்திய

 17 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான "இருண்ட காலக் கதைகள்" நூலின்  வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெறவுள்ளதை  முறையான வெளியீட்டு விழாவுக்கு முன்பே என்ற நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

இணைய வழியில் நடைபெற்ற அந்த விழாவில் 98 வயதான, தமிழின் மூத்த படைப்பாளி முழுவதுமாக கலந்து கொண்டு ஆர்வமாக கவனித்தார் என்பது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது என்பதால் அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



நேற்றைய நிகழ்வில் என்னை ஆச்சர்யப்படுத்திய இன்னொருவர் திரைக் கலைஞர் திரு பொன்வண்ணன். 



தோழர்கள் கருப்பு கருணா, ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, அ.கரீம் ஆகியவர்களின் உரை சிறப்பாக இருந்தது. அவர்கள் போராட்டக் களத்தில் நேரடியாக நிற்பவர்கள்.

திரு பொன்வண்ணன், இன்றைய அரசியல் சூழல் எப்படி அச்சமூட்டுகிறது என்பதை விவரித்தது மட்டுமல்ல, நூலில் உள்ள கதைகளைப் பற்றியும் நுட்பமாக மதிப்பீடு செய்தார். தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "என்ன கதை இது?" பற்றி பேசுகையில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தன்னுடைய வீட்டில் உள்ளவர்களே இழிவு படுத்தியுள்ளனர் என்பதை கொஞ்சமும் தயங்காமல் குறிப்பிட்டார். இந்த சுய விமர்சனம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது என்பதையும் பதிவு செய்கிறேன்.

தரமான ஒரு நூலுக்கு ஒரு தரமான நிகழ்வு 


1 comment: