Thursday, September 17, 2020

மோடியை ட்ரம்ப் கோபித்துக்கொள்ளப் போகிறார் . . .

 இன்று காலை இந்து நாளிதழில் படித்த ஒரு செய்தி.



68 % அமெரிக்க இந்தியர்கள் வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடேனையே  ஆதரிக்கவுள்ளார்கள் என்று பல சர்வேக்களும் சொல்கிறதாம்.

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி, நல்ல கொள்ளி  என்ற நிலைதான் என்றாலும் 

இந்தியர்கள் ஜோ பிடேனை ஆதரிப்பதால் டொனால்ட் ட்ரம்ப் மோடி மீது கடும் கோபம் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆமாம்.

மோடிக்கு பயங்கர வரவேற்பு எல்லாம் கொடுத்தும் பயனில்லை என்பதால் வரக்கூடிய கோபம் அது.

அமெரிக்க வாழ் இந்தியர்களை ட்ரம்பிற்கு ஆதரவாக திரட்டும் சக்தி ஒன்றும் மோடிக்கு கிடையாது என்பது புரிவதால் வரக் கூடிய கோபம் அது.

ஆனால் ஒன்று

நாளை ஜோ பிடேன் வெற்றி பெற்றாலும் அவர் காலடியில் சரணடையவும் மோடி தயாராகவே இருப்பார். கார்ப்பரேட்டுகளும் அதையே விரும்புவர்.

ஆமாம்,

குடியரசுக் கட்சியோ, ஜனநாயகக் கட்சியோ. இருவருமே முதலாளிகளின் பிரதிநிதிகள்தானே!

No comments:

Post a Comment