Wednesday, September 9, 2020

ஆஜானை அடிப்பவர்கள் மனிதர்களே அல்ல

 



ஆஜான் புதிதாக ஒரு அறிவியல் புனைவுத் தொடர் எழுத ஆரம்பித்துள்ளார். அதை பலரும் அநியாயத்திற்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொல்வதெல்லாம் அறிவியலுக்கு பொருந்தாதது, தர்க்கமே இல்லாதது என்று வேறு ஆதாரங்களை காண்பிக்கிறார்கள். இலக்கிய இளிப்பியல் என்று ஆஜானை ஓட்டுவதற்காக ஒரு தனி  முகநூல் பக்கமே துவக்கி உள்ளார்கள்.

 அறிவியல் புனைவு என்றாலே உடான்ஸ்தானே! இதில் எதற்கு அறிவியல் ஆதாரமும் தர்க்கமும் என்று நான் யோசித்தேன்.

 “பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது” என்று பம்மல் கே சம்பந்தம் சொன்னது போல ஆஜானின் கதையைப் படித்து விட்டு நக்கல் அடித்து விட்டு போய்க் கொண்டே இருக்கலாமே, எதற்கு இவ்வளவு மெனக்கெட்டு அறிவியல் விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன்.

 


அப்படி என்னத்தான் ஆஜான் எழுதியுள்ளார் என்று அவர் பக்கம் போய் அந்த “உடையாள்” தொடரை படிக்கத் தொடங்கினேன்.

 அப்போதுதான் புரிந்தது. ஆஜானை அடிப்பவர்கள் சாதாரணமான மனிதர்கள் அல்ல, தெய்வப் பிறவிகள், இல்லையில்லை தெய்வங்கள் என்று.

 உடையாளை ஒரு அத்தியாயம் கூட முழுமையாக படிக்க முடியாமல் ஓடி வந்து இயல்பு நிலைக்கு வருவதற்காக கொஞ்ச நேரம் இம்சை அரசன் காமெடி காட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு எக்ஸ்ட்ரா  காபி வேறு குடிக்க வேண்டியிருந்தது.

 ஆஜானை முழுமையாக படித்து அவரது அபத்தங்களை அறிவியல் ஆதாரங்களோடு விளக்குபவர்கள் எப்படி சாதாரண மனிதர்களாக இருக்க முடியும்? அவ்வளவு பொறுமையெல்லாம் எனக்கெல்லாம் சாத்தியமே இல்லை.

 ஆஜான் இதற்கெல்லாம் கவலைப்படுபவர் அல்ல. அவரைப் பொறுத்தவரை எந்த ஒரு படைப்பிலும் கருத்து, நியாயம், தர்க்கம், உண்மை ஆகியவை எதுவுமே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் கதை என்பது கூட தேவை இல்லை. அழகியல் எனும் எழவியல் மட்டும் இருந்தால் போதும்.

 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டும் ஆஜானை படிக்காமல் இருந்தால் நல்லது. சிக்கல் சண்முகசுந்தரம் போல “எனக்கு அறிவியலே மறந்து போயிடும் போல இருக்கு என்று கதற வேண்டியிடுக்கும்.  சில ஸ்க்ரீன் ஷாட்டுகள் போடுவோ என்று யோசித்தேன். உங்களின் உடல் நலன், மன நலன் மீதான் அக்கறையில் தவிர்த்து விட்டேன்.

 


இரண்டு ஏளன சித்திரங்கள் (மீமிற்கு ஆஜான் கொடுத்த பெயர் அது) இந்த பதிவிற்கே தயார் செய்துள்ளேன். இதனை அவருக்கே அனுப்பி வைக்கலாம் என்று பார்த்தால் மீம் அணுப்பவர்களை எல்லாம் ப்ளாக் செய்து விடுகிறாராம்.

 நான் என் செய்வேன்?

 பிகு : ஆஜான் அறிவியல் அறிவில் மட்டுமல்ல, சட்ட அறிவிலும் டுபாக்கூர்தான் என்று ஒரு வழக்கறிஞர் பதிவு எழுதியுள்ளார். அதை பகிர்ந்து கொள்ளாவிட்டால் என் தலை சுக்கு நூறாக சிதறிப் போகும் அபாயமுள்ளதால் அடுத்த பதிவு அதுதான். பொருளாதார அறிவில் பூஜ்ஜியம் என்பதை செல்லா நோட்டு விவகாரத்தின் போதே அவர் கட்டுரைக்கு  பதில் எழுதி நிரூபித்துள்ளேன். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கூட கிடைத்துள்ளது. அது அப்புறம்.

No comments:

Post a Comment