நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் கேள்வி நேரமும், உறுப்பினர்கள் நோட்டீஸ் எதுவும் இல்லாமல் எந்த பிரச்சினையையும் எழுப்ப வாய்ப்பளிக்கும் பூஜ்ஜிய நேரமும் (ZERO HOUR) ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் பெயரைச் சொல்லி நடந்துள்ள அராஜகம் இது.
எதிர்க்கட்சிகளின் உரிமைகளை முடக்கும் ஜனநாயகப் படுகொலை இது.
ஏன் இந்த முடிவு? நாங்கள்தான் பெரும்பான்மை என்ற வழக்கமான திமிரா அல்லது கேள்விகளை சந்திக்க முடியாத பயமா?
அதிகரிக்கும் கொரோனா தொற்று
மோடியின் மர்ம நிதி,
பெருகி வரும் வேலையின்மை
குறைந்து போகும் ஒட்டு மொத்த உற்பத்தி
மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி யை ஏமாற்றுவது,
புதிய கல்விக் கொள்கை
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை
சீனாவுடனான பிரச்சினையில் முரண்பாடான அறிக்கைகள்
இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்க கையாலாகாத ஒரு கேடு கெட்ட அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்துகிறது.
அவர்கள் சில மசோதாக்களை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இக்கூட்டத் தொடர்.
அதுவும் நடக்காவண்ணம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் நடக்க முடியாவண்ணம் முடக்கிட வேண்டும்.
மக்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாமல் தடுப்பது நாடாளுமன்றம் செயல்படுவதை விட நல்லதுதான்.
ஆட்சி அவர்கள் கைகளில் உள்ள திமிர்தான் காரணம்
ReplyDelete