பாஜக ஆளும் மாநிலமான கர்னாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கி விட்டது.
மெட்ரோ ரயிலில் இந்தியை அகற்ற வேண்டும் என்ற போராட்டம் உங்களுக்கு நினைவில் இருக்கும்
தமிழகம் போல திரைக் கலைஞர்கள் டிஷர்ட் வாசகங்களில் செய்தியை சொல்வது தொடங்கி விட்டது.
மேலே உள்ள படத்தில் முதலில் இருப்பவர் சிவராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்.
அவரது டிஷர்டில் "நான் கன்னடம் பேசும் இந்தியன்" என்று எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது இருப்பவர் தனஞ்சயா
அவரது டிஷர்டில் "கன்னடமே எங்களது தேசிய மொழி" என்று எழுதப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக அங்கே வானதி, ராசா, தங்கர்பச்சான் மாதிரி யாரும் புறப்படவில்லை. ராஜ்குமாரின் மகனை பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு வேளை "கன்னடம் தெரியாது போடா" என்று மார்கண்டேய கட்ஜூ சொல்லியிருந்தால் அவர்களது டிஷர்ட் கூட "இந்தி தெரியாது போடா" என்று சொல்லியிருக்கலாம்.
பிகு: கட்ஜூ முன்பு ஒரு முறை ஜொள்ளியதை இப்போதுதான் முழுமையாக கவனித்தேன். அது பற்றியும் எழுத வேண்டும்.
No comments:
Post a Comment