Sunday, September 20, 2020

ராஜீவ் காந்தி அனுப்பிய கடிதம்




 நேற்று முன் தினம் எங்கள் மகத்தான் தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளன்று எழுதிய பதிவில் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்தாக பிரிக்கும் முடிவை கைவிடுவது என்ற மத்தியரசின் முடிவை ராஜீவ் காந்தி தோழர் சுனில் மைத்ரா அவர்களுக்குத்தான் கடிதம் எழுதி தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு அனானி சங்கி அப்படி கடிதம் இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே, சும்மா கதை விடாதே என்று சவால் விட்டிருந்தது. பாவம் மோடியின் பொய்களை கேட்டு கேட்டு எல்லோருமே பொய்தான் பேசுவார்கள் என்ற நினைப்பு போல. இதோ அந்த கடிதம்.



ஏற்கனவே ஒரு முறை இங்கே பகிர்ந்து கொண்டதால், இம்முறை பகிர்ந்து கொள்ளவில்லை. எங்களின் வரலாற்று ஆவணம் அல்லவா இக்கடிதம்!

அந்த அனானி சங்கி நாங்கள் ஒன்றும் "கதை அளந்து மாட்டிக் கொண்ட கங்கணா ராவத்" அல்ல என்று இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

அது என்ன கதை அளந்து மாட்டிய கங்கணா என்று கேட்கிறீர்களா?

அதுதானே அடுத்த பதிவு . . .

பிகு: கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டிற்கு தோழர் ஜோதிபாசுவை தோழர் சுனில் மைத்ரா அழைத்து வருவதுதான் மேலே உள்ள படம். 


No comments:

Post a Comment