Saturday, September 5, 2020

பாரத மாலா எப்படி சாத்தியம் மோடி?

 



*நாளொரு கேள்வி: 04.09.2020*

 இன்றும் நம்மோடு தொடர்கிறார் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்.*

----------------------------------------------------

 *"பாரத மாலா"- எல்..சியின் பங்களிப்பு இல்லாமலா?*

 *கேள்வி:* 

 எல்..சி யின் பங்களிப்பு நெடுஞ்சாலை மேம்பாட்டில் எவ்வாறு உள்ளது

 *.சுவாமிநாதன்*

 நேற்று திருநெல்வேலி கவியரங்கில் குறிப்பிட்ட வரிகளை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்

 *எல்..சி தேசத்தின் குற்றாலம்/*

*நாடெங்கும் சலங்கை சப்தம்/*

*சீரிய அதன் தடம்/* 

*சித்திரை சபை நடனம்*

 

*எத்தனை அருவிகள்/*

*பேரருவி... ஐந்தருவி.../*

*செண்பக அருவி... சிற்றருவி என/*

 

*ரயில்வேக்கு ஓர் அருவி.../*

*நெடுஞ்சாலைக்கோர் அருவி.../*

*துறைமுக வளர்ச்சிக்கோர் அருவி.../*

*குடிநீர்த் திட்டங்களுக்கோர் அருவி.../*

 

*உயிர் நதியின் தடங்கள்

*ஜீவ ஊற்றின் பிரவாகம்/* 

இந்திய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு எல்..சி யின் பங்களிப்பு மகத்தானது

*"பாரத் மாலா பாரி யோஜனா"* திட்டம் ஆரம்பத்தில் 5.35 லட்சம் கோடிகளுக்கு மதிப்பிடப்பட்டது. பின்னர் நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட செலவினங்கள் அதிகமானதால் மதிப்பீடு 8.4 லட்சம் கோடிகளுக்கு உயர்த்தப்பட்டது. *இது 34800 கி.மீ இந்திய நெடுஞ்சாலைகளை அமைக்கிற திட்டம்.* (இதில் 10000 கிமீ நீளமான நெடுஞ்சாலைகள் ஏற்கெனவே இருப்பவை. அவற்றை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்). 

மதிப்பீடுகள் எல்லாம் கணக்கிடப்பட்டாலும், பிறகு உயர்த்தப்பட்டாலும் *கல்லாவில் பணம் வேண்டுமே!* ஜுலை 2018 ல் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறது. பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென அதில் கேட்கப்பட்டது. இக் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்கவில்லை. 5000 கோடிகள்

மட்டுமே பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.

2019 ஜூலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் *நிதின் கட்கரி, எல்..சி சேர்மன் சந்திப்பு* நிகழ்ந்த செய்திகள் வந்தன. அச் சந்திப்பு முடிந்தவுடன் வெளி வந்த அறிவிப்பு *எல்..சி 1.25 லட்சம் கோடிகளைத் தரும்* என்பதே. ஒவ்வோர் ஆண்டும் ரூ 25000 கோடி என்ற முறையில்  ஐந்து ஆண்டுகளில் இந்த 1.25 லட்சம் கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 எங்களுக்கு "பணத்திற்கு பஞ்சமில்லை" என்று மகிழ்ச்சியோடு நிதின் கட்கரி தெரிவித்தார்.  

 நிறைய வழிகள் நிதி திரட்டலுக்காக சொல்லப்படுகின்றன. செஸ் வரி, டோல் கேட் கட்டண வசூல், தனியார் பங்களிப்பு, கடன் பத்திரங்கள், சந்தை கடன்... இப்படி சொல்லப்பட்டாலும் எல்.. சி என்ற ஊற்று பீறிட்டு வருகிறது என்பதே உண்மை. *ஒரே ஒரு நிறுவனம் மொத்த மதிப்பீட்டில் 15 சதவீதத்தை தர முன் வருகிறது* எனில் எவ்வளவு பெரிய பங்களிப்பு

 30 ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி பயன்படுத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டது. 8% வட்டி இருக்கக் கூடும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டி மறு பரிசீலனைக்கு ஆளாகும். *இவ்வளவு நெகிழ்வான, நீண்ட கால முதலீடுகள் எங்கே இருந்து கிடைக்கும்?*

 இதுதான் அரசின் கைகளில் மக்களின் உள்நாட்டு சேமிப்புகள் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிற அனுபவமாகும். *ஆகவேதான் ஆயுள் இன்சூரன்ஸ் தொழில் அரசின் இயல்பான ஏகபோகமாக இருக்க வேண்டுமென்கிறோம்.*

 

No comments:

Post a Comment