Saturday, September 12, 2020

நீட் தற்கொலைகளை விட கொடுமையாக


 "நீட்" உருவாக்கியுள்ள பதற்றம் காரணமாக தமிழகம் இன்று இன்னொரு உயிரை பறித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் (அதிகாரபூர்வ ஆளும் கட்சி உட்பட) எதிர்க்கிற, தமிழகத்திற்கு அவசியமில்லாத, பொருத்தமில்லாத ஒரு தேர்வை திணித்ததன் விளைவு அனிதா தொடங்கி ஜோதி வரை தொடர்ச்சியாக பல உயிர்களை இழந்து கொண்டே உள்ளோம்.

ஒவ்வொரு "நீட்" மரணத்தின் போதும் செய்யப்படுகிற உபதேசங்கள் அந்த மரணத்தை விட கொடுமையாக இருக்கிறது. 

மருத்துவக் கட்டமைப்பை வலிமையாக வைத்திருக்கிற தமிழகத்தின் மருத்துவப் படிப்பு இடங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கும் முயற்சியாகவே "நீட்" அமைந்துள்ளது.

பனிரெண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பள்ளியில் பெற்ற கல்வியை விட லட்சங்களைக் கொட்டி தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறுகிற மூளைச்சலவைப் பயிற்சிதான் "நீட்" வெற்றியை தீர்மானிக்கிறது.

ஏன் "நீட்" எழுத தமிழர்களால் முடியாதா என்று கேட்கும் எந்த முட்டாள் மர மண்டைக்கும் இந்த உண்மை புரியாது.

ஒரு தற்கொலைக் கடிதத்தைக் கூட ஒழுங்காக எழுத முடியாதா என்று சிலர் கேட்கிற போது "அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்" என்ற அளவிற்கு கோபம் வருகிறது.

என்னமோ பெரிய புத்திசாலிகள் அவர்கள் என்று நினைப்பு!

Micro Irrigation என்பதை சிறுநீர் பாசனம் தமிழாக்கம் செய்த புத்திசாலியை தலைவனாகக் கொண்ட மூடர் கூட்டமெல்லாம் அடுத்தவர் தகுதியைப் பற்றி கிண்டலடிப்பதெல்லாம் கொடுமை.

இந்த மரணங்கள் நிற்க ஒரே வழி "நீட் தடை" மட்டுமே

 



No comments:

Post a Comment