திருப்பதி
திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் டிசம்பர் 2016 ல்
வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். கணக்கில் வராத பணமாக ரொக்கமாக ரூபாய் நூறு கோடியும்
தங்கமாக நூறு கிலோவும் கைப்பற்றப்பட்டது என்று அவரை கைது செய்த போது சி.பி.ஐ அறிக்கை
கொடுத்தது.
நூறு
கோடி ரூபாய் ரொக்கமும் நூறு கிலோ தங்கமும் ஏன் கணக்கில் வராத பணம் என்பதற்கு எந்த கணக்கும்
(அதாவது ஆதாரம்) எங்களிடம் இல்லை என்று சொல்லி சி.பி.ஐ இன்று வழக்கை மூடி விட்டது.
சேகர்
ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த அதே வேளையில் தமிழகத்திற்கு மிகப் பெரிய இழிவாக அன்றைய
தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறையிலேயே சோதனை நடந்தது.
ராம்
மோகன் ராவ் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் பணி செய்யவும் பணி ஓய்வு பெறவும் அனுமதிக்கப்பட்டார்.
அப்போதே சேகர் ரெட்டி கேஸ் என்ன ஆகும் என்பது தெரிந்து விட்டது. ஆகவே சி.பி.ஐ முடிவில்
அதிர்ச்சி அடையவோ, ஆச்சர்யப்படவோ ஏதுமில்லை.
என்னுடைய
கோரிக்கை எல்லாம் ஒன்றுதான்.
சேகர்
ரெட்டி வீட்டில் கைப்பற்ற நூறு கோடி ரூபாய் ரொக்கத்தில் பத்து கோடி ரூபாய் புது இரண்டாயிரம்
ரூபாய் நோட்டுக்கள். அதாவது ஐந்து லட்சம் சிப்பு வைக்கப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய்
நோட்டுத்தாள்கள்.
எந்த
சமயத்தில் ?
நிலைமை
சீரடையவில்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள் என்று மோடி காலக்கெடு கொடுத்திருந்த
ஐம்பது நாட்களுக்குள்.
ஒரு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கூட பார்க்க முடியாமல், பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகள்
முன்பாக பைத்தியக்காரர்கள் போல நாம் கால் கடுக்க நின்று, ஏடிஎம், ஏ.டி.எம் மாக திரிந்து
கொண்டிருந்த நேரம்.
வங்கியில்
பணம் மாற்ற வந்தவர்களுக்கு அடையாள மை வைத்து அசிங்கப் படுத்திய காலம் அது.
சேகர்
ரெட்டி மேல சி.பி.ஐ. கேஸ் நடத்து இல்ல நடத்தாம அவனுக்கு மறுபடியும் அறங்காவலர் பதவி
கொடு.
அது
பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
ஆனா,
பத்து கோடி ரூபாய்க்கு ஐந்து லட்சம் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்கு
எப்படி வந்தது என்று
எங்களுக்கு
தெரிஞ்சே ஆகனும். ஆமாம், தெரிஞ்சே ஆகனும்.
அந்த ரகசியம் தெரியனும்னா நாம் பிரதமர் ஆகனும்.
ReplyDeleteஇருபத்தி நான்கு கோடி ரூபாய்
ReplyDelete