Tuesday, September 8, 2020

என்னை சொல்லத் தூண்டாதீர் . . .

 


“இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் நேற்று பரபரப்பானது. அதற்கு எதிர்வினையாற்றுவதாக “திமுக வேண்டாம் போடா” என்றும் “உருது தெரியாது போடா” என்றும் பரப்பி நாங்கள் சுத்த முட்டாள்தனத்தால் செய்யப்பட்ட அக்மார்க் மூடர்கள் என்று சங்கிகள் நிரூபித்து விட்டார்கள். திமுகவாலும் இஸ்லாமியர்களாலும்தான் இந்த பிரச்சினை என்பது அவர்கள் நினைப்பு. வானதி சீனிவாசன், மாரிதாஸ், மாலன், அண்ணாமலை என்று பலரும் இந்த மூடர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

 பிரச்சினைக்கு காரணம் யார் என்று தெரியாத மூடர்கள் இவர்கள்.

 மும்மொழிக் கொள்கை என்று மோடியின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு பிறகு தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நடக்கிறது.

 “இந்தி தெரியாத நீயெல்லாம் இந்தியரா?” என்று கனிமொழியைக் கேட்டு பிரச்சினைக்கு அடித்தளம் போட்டது யார்?

 “இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்” என்று பிரச்சினையை விசிறி விட்டது மோடியின் செல்லப் பிள்ளை வைத்ய ராஜேஷ் கோச்சா.

 இயக்குனர் வெற்றிமாறனும் இழிவு செய்யப்பட்ட செய்தி கொதி நிலையை அதிகரித்தது.

 இந்தி திணிப்பை நியாயப்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் ஜட்ஜய்யா மார்க்கண்டேய கட்ஜு  எதிர் வினைகளை சந்திக்க திராணியின்றி

 “தமிழ் தெரியாது போடா”

 என்று கடுப்படிக்க அப்போதுதான் தொடங்கியது

 “இந்தி தெரியாது போடா”

 இவர்களின்  இந்தியை திணிக்கும் முயற்சிகளால்தான் “இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு” என்பது “இந்தி எதிர்ப்பு” என்ற நிலையை அடைந்து விட்டது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத மூடர்கள், முட்டாள்கள் இவர்கள்.

 “திமுக வேண்டாம் போடா” 

“உருது தெரியாது போடா”

 (“உருது தெரியாது போடா” என்ற பிரச்சாரத்திற்கு “எங்களுக்கும் தெரியாது நீ போடா – தமிழ் முஸ்லீம்” என்ற எதிர்வினை க்ளாசிக் ரகம்)

 என்று இவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் இவர்களைத்தான் முட்டாள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்பதை கூட அறியாத மூடர்கள்.

 மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்ல வேண்டியுள்ளது.

 எந்த மொழியை கற்பது என்பது என்னுடைய விருப்பத்திற்கும் தேவைக்கும் உட்பட்டது. அது என் உரிமை. நான் என்ன மொழி படிக்க வேண்டும், பேச வேண்டும் என்று எனக்கு கட்டளையிட, அல்ல அல்ல ஆலோசனை சொல்லக் கூட எந்த கொம்பனுக்கும் அருகதை கிடையாது.

 இந்தி தெரிந்தவர்கள்தான் இந்தியர்கள் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் இழிவு படுத்தினால்

 …………………………………………………………………………………………….

 வேண்டாம் . . .

 என்னை சொல்லத் தூண்டாதீர்கள்.

 

No comments:

Post a Comment