Thursday, September 3, 2020

எல்லா சுவர்களும் பிரிப்பவை அல்ல.

 *உத்தப்புரம் சுவரும்- எல்..சி என்கிற அரணும்*

 எல்லா சுவர்களும் பிரிப்பவை அல்ல.

 உத்தப்புரம் சுவர் உழைப்பாளிகளைப் பிரித்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணி செயல்பாட்டாளர்கள் அச் சுவரை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்கள். *தீண்டாமைச் சுவர்* அகற்றப்பட வேண்டுமென்ற கள இயக்கங்களில் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நூற்றுக் கணக்கில் பங்கேற்றவர்கள். நீதி விசாரணைகளில் நியாயம் கிடைக்க பாடுபட்டவர்கள்

 *எல்..சி மாபெரும் அரண்.* அது எல்லோரையும் அரவணைத்து தேசத்தை - மக்கள் நலனை - சமச் சீரான வளர்ச்சியைப் பாதுகாக்கிற பெரும் மதில் சுவர்

 உத்தப்புரம் சுவர் இடிப்பு களத்தில் முன்னின்ற இரண்டு போராளிகளை மறக்க இயலாது. பல நாட்கள் சிறையில் தள்ளப்பட்ட போதும் உறுதி காட்டி உத்தப்புரம் மக்களை வழி நடத்தியவர்கள் அவர்கள். *மரியாதைக்குரிய பொன்னையா அவர்களும், சங்கரலிங்கம் அவர்களும்...*

 அன்று மக்களைப் பிரிக்கிற சுவரை உடைக்க அவர்களோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கைகோர்த்தது

 இன்று எல்..சி என்கிற மக்களை இணைக்கிற பெரும் அரணைப் பாதுகாக்கிற இயக்கத்தில் மகள், மகன்மருமகள், மருமகன், பேத்திகளோடு *"எல்..சியின் வலிமை; தேசத்தின் வலிமை"* என்று கை கோர்த்து நிற்கிறார் 80 வயதைக் கடந்த பெரியவர் *உத்தப்புரம் பொன்னையா.*



 நன்றி... மிக்க நன்றி...

 

தென் மண்டல இன்சூரன்ஸ்வ் ஊழியர் கூட்டமைப்பின்

துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின்

முக நூல் பதிவு

 

No comments:

Post a Comment