Sunday, September 6, 2020

முதலிடம் வேண்டாம் மோடி

 


வாழ்த்து சொல்வதா, வசை பாடுவதா என்று தெரியவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நாற்பத்தி ஒன்று லட்சத்தை அடைந்து பிரேசிலைக் கடந்து இந்தியா இரண்டாவது இடத்தை தொட்டுள்ளது.

இந்த இடத்தை அடைவதற்கு உங்கள் ஆட்சி எடுத்த முயற்சிகள் என்ன சாதாரணமானதா என்ன?

கொஞ்சம் கூட தொலை நோக்குப் பார்வை இல்லாத, திட்டமிடுதல் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவியல் பார்வை இல்லாத, பொருளாதார அறிவு இல்லாத, மக்களின் பிரச்சினைகள் பற்றி புரியாத ஒரு கேடு கெட்ட, கேவலமான அரசு உங்களுடையது.

வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை மூட மயக்கத்திலேயே மூழ்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் சில்லறைத்தனமான அரசு உங்களுடையது.

உங்கள் எஜமான் வந்து போகும் வரை கொரோனா பற்றி எதுவுமே கவலைப் படாத அரசு உமது அரசு.

மத்தியப்பிரதேசத்தில் குதிரை பேரம் நடத்தி கொல்லைப்புற வழியாக உங்கள் கட்சியின் ஆட்சியை அமர்த்துவதற்காக வேடிக்கை பார்த்த அரசு உமது அரசு.

ஊரடங்கினால் என்ன விளைவுகள் வரும், அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தடாலடியாய் அறிவித்த அரசு.

முன்னர் உமது இரண்டு மூடத்தனங்களான செல்லா நோட்டு மற்றும் ஜி.எஸ்.டி மூலம் ஏற்பட்ட தீய விளைவுகள் பற்றி புரிந்து கொள்ளாமல் மீண்டும் ஒரு மூடத்தனத்தை செய்தீர்.

கோடிக்கணக்கான மக்கள் நெடுஞ்சாலைகளில் நடந்தும் உமக்கு தீவிரம் புரியவில்லை.

தொற்று பரவலை தடுக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக கை தட்டு, மணி அடி, தட்டை உடை, விளக்கேற்று, பூ தூவு என்று நாடகம் நடத்திக் கொண்டிருந்தீர்கள்.  உலகமெல்லாம் என்னை பாராட்டுகிறது என்று வெட்டிப் பெருமை வேறு பேசினீர்கள்!

கொரோனா உலக நாடுகளுக்கு தொற்று. உமக்கோ, இந்தியாவை கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்பதற்கான நல்ல வாய்ப்பு. உலகின் மிகச் சிறந்த தரகர் என்பதை இந்த கொடுங்காலத்திலும் நிரூபித்தீர்.

கவனத்தை திசை திருப்ப மயிலோடும் வாத்தோடும் நாயோடும் போட்டோ எடுத்து போஸ் கொடுத்தீர்.

பொருளாதாரப் பின்னடைவில் எதிர்மறையில் முதலிடத்தை இந்தியாவிற்கு நீங்களும் உங்கள் திமிர் பிடித்த நிதியமைச்சரும் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள்.

போதும்.

இது போதும்.

கொரோனா தொற்றிலும் முதலிடத்தைப் பெற்றுக் கொடுக்க முயலாதீர்!

உங்களது நண்பரும் சக மூடருமான டொனால்ட் ட்ரம்ப் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்றாலும் . . .

3 comments:

  1. Enna irundhaalum, valathu saari muttaalgal'a mudhal idam Donald, irandaavathu Edam bolseniero (Brazil), moonavathu Edam namma mutaal.

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் குறைத்து மதிப்பிடக் கூடாது

      Delete
  2. America'va dictatorship aaga maatha Donald evvalo kashtapaduraan.feku india'va 6 years'la yae ivvalavu easy'ya dictatorship aaga maathitaan paarunga.

    ReplyDelete