Friday, September 18, 2020

எல்.ஐ.சி யைக் காத்த தளபதி . . .

 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.

அவருடைய பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.



அவற்றில் மிக முக்கியமான ஒன்று "எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பது" என்ற மசோதாவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் நடத்திய போராட்டம்.

இந்திரா அம்மையார் கொண்டு வந்த மசோதாவிற்கு எதிராக, அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.பி யாக இருந்த தோழர் சுனில் மைத்ரா கடுமையாக எதிர்க்கிறார். மற்ற எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்.

மசோதா குறித்து பரிசீலனை செய்ய நாடாளுமன்ற பொறுக்குக் குழு (Select Committee) அமைக்கப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் பெயரளவிலாவது இருந்த காலம் அது. அக்குழுவின் செயலாளராக இருக்கிற தோழர் சுனில் மைத்ரா நாடெங்கிலும் அக்குழு சென்று கருத்துக்களை திரட்ட வைக்கிறார். மசோதாவை இந்திரா அம்மையார் நினைத்த வேகத்தில் நிறைவேற்ற முடியவில்லை. 

பொறுக்குக் குழு பெரும்பான்மை அடிப்படையில் எல்.ஐ.சி யை ஐந்தாக பிரிக்கலாம் என்று சொல்கிறது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது அன்றைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தோழர் சுனில் பேசுகிறார். நள்ளிரவு கடந்தும் விவாதம் முடியவில்லை. அன்றுதான் கூட்டத்தொடரின் கடைசி நாள். மசோதா வாக்கெடுப்பிற்கு வராமலேயே கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது.

பின் இந்திரா அம்மையார் கொல்லப்பட ராஜீவ் காந்தி பிரதமராகிறார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர்கள் அவரை சந்தித்து எல்.ஐ.சி நிறுவனத்தை பிளவு படுத்தும் முடிவை கைவிடச் சொல்லி வலியுறுத்துகின்றனர். அவரும் அதை ஒப்புக் கொண்டு அதற்கான கடிதத்தை தோழர் சுனில் மைத்ராவிற்கே அனுப்புகிறார்.

எல்.ஐ.சி நிறுவனம் பிளவு படுவது அன்று தடுக்கப்படாவிட்டால் இன்றைய பிரம்மாண்டமான வளர்ச்சியோ, நாட்டிற்கு அதன் பங்களிப்போ சாத்தியம் இல்லை.

எல்.ஐ.சியை காத்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்றால் அப்போரின் தளபதி தோழர் சுனில் மைத்ரா.

உங்களை எந்நாளும் மறவோம் தோழர்

3 comments:

  1. Let us be loyal to the organisation and thankful to the great leaders by protecting LIC in public sector.

    ReplyDelete
  2. அப்படி ராஜீவ் காந்தி உங்கள் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தால் அதை வெளியிட முடியுமா? சும்மா கதை விடக் கூடாது

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் அனானி, நாங்கள் சங்கிகள் அல்ல. அது வரலாறு. சில வருடங்கள் முன்பாகவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நாளை மீண்டும் வெளியிடுகிறேன்

      Delete