Thursday, September 3, 2020

மொட்டைச் சாமியார் மூக்குடைந்தது. சங்கிக்கும் . . .

 டாக்டர் கஃபீல் கான் – யாராலும் மறக்க இயலாத பெயர்.

 யோகியின் சொந்தத்தொகுதியில் ஆக்ஸிஜன் கம்பெனிக்கு ஒழுங்காக உபி அரசு பணம் கொடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போன கொடூரத்திற்கு சாட்சியாய் திகழ்பவர். தன் சொந்த முயற்சியால் அலைந்து திரிந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய உன்னத மருத்துவர்.

 உ.பி மாநில மொட்டைச்சாமியாரோ, அரிய சேவை செய்தவரை பாராட்டி விருதுகள் கொடுப்பதற்குப் பதிலாக அவரது ஆட்சியின் அவலம் அம்பலமானதால் கைது செய்து சிறையிலடைத்தார். பணி நீக்கம் செய்தார்.

 சிறையிலிருந்து மீண்ட அவரை சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றார் என்பதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.

 அப்படி செய்தது தவறு என்று என்று அலகாபாத் உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவரும் இன்றும் வெளியே வந்து விட்டார்.



 யோகியின் மூக்குடைந்தது போலவும் நீதிமன்ற குட்டினால் தலையில் வீக்கம் வந்தது போலவும் இந்து நாளிதழில் திரு சுரேந்திரா ஒரு அருமையான கார்ட்டூனை போட்டு அவரது முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தார்.



 அதற்கு ஒரு சங்கி “இந்த  கார்ட்டூனை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும்” என்று தெனாவெட்டாக பதில் போட

 “ஆமாம். இன்னும் கொஞ்சம் வீக்கங்களை சேர்க்க வேண்டி இருக்கும்” என்று நச்சென்று பதில் சொன்னார் திரு சுரேந்திரா.

 பாவம் மொட்டைச்சாமியாரின் மூக்கு மட்டும் உடையவில்லை. அவருக்கு முட்டு கொடுத்த சங்கியின் மூக்கும் சேர்ந்தே!

1 comment: