Wednesday, September 23, 2020

அம்மையார் மோடியோட மந்திரி . . .



 ஒட்டு மொத்த உற்பத்தி குறைந்து பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ள வேளையில் இப்படி புடவைக்கு மேட்சிங்காக முகக் கவசம் அணிவதில் கவனம் செலுத்துகிறீர்களே என்று நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரை கேள்வி கேட்பவர்களே, இந்த கேள்வி நியாயமா? தர்மமா? தகுமா? அடுக்குமா?

யார் அவர்?

தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கச் செய்து பதினைந்து லட்ச ரூபாய்க்கு கோட் அணிந்தவர், ஒரு நாளைக்கு நான்கு முறை உடை மாற்றுபவர், அன்னிய நாட்டு கண்ணாடி, கால் செருப்பு, பேனா என்று வெளி நாட்டுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் சுதேசி, கொத்து கொத்தாக மக்கள் மடிந்த வேளையிலும் மயிலோடும் வாத்தோடும் படமெடுத்து மகிழ்பவர், இப்படிப்பட்ட சிறப்பான ஒரு பிரதமர் நியமித்த நிதியமைச்சர்.

மோடி செய்வதில் கொஞ்சம் கூட செய்யவில்லையென்றால் அந்த பொறுப்பிற்கே அசிங்கமல்லவா?

நாடு,

மக்கள்,

பொருளாதாரம்.

அது கிடக்குது கழுதை!

அம்பானிக்கும் அதானிக்கும் அடுத்தது எதைக் கொடுக்கலாம்னு முடிவு செய்யனும்!


No comments:

Post a Comment