Tuesday, September 15, 2020

நீட் எனும் கொலை வாள் -சுவெ

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர்

சு.வெங்கடேசன் இன்றைய பாராளுமன்ற உரையில்..

அனிதா முதல் எனது தொகுதியைச்சார்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்தின் தீராத்துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம் எப்பொழுது நீட் தேர்வினை கைவிடுவீர்கள்.

நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது.
ஒரு முனை, மாநில    அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும்  குத்திக்கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது, மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது.

இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலை வாளினை கீழே போடுவீர்கள்? என்று நாங்கள் கேட்கிறோம்.

தமிழக சட்டப்பேரவை மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட மசோதாவை ஏக மனதாக நிறைவேற்றி அனுப்பியது, குடியரசுத்தலைவர் அதனை திருப்பி அனுப்பினார். 

அரசமைப்புச் சட்டம் 201ன் படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் வாய் திறப்பதில்லை. ஆனால் திரைக்கலைஞர் சூர்யா ஒரு வார்த்தை சொன்னால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். 

நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட் தேர்வினை கைவிடுங்கள். கைவிடுங்கள். கைவிடுங்கள் 

No comments:

Post a Comment