Wednesday, September 30, 2020

ஜட்ஜய்யா அது ரொம்ப தப்புங்க

 


காலையில் எழுதிய பதிவிலேயே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வருமே தவிர நீதி கிடைக்காது என்று எழுதியிருந்தேன்.

 ஆகவே இன்றைய தீர்ப்பு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ கொஞ்சமும் அளிக்கவில்லை.

 சதாசிவம், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொபட், அருண் மிஷ்ரா போன்றவர்கள்  நீதித்துறையில் நிரம்பியுள்ள  இன்றைய சூழலில், அத்வானிக்கும் உமா பாரதிக்கும் தண்டனை கொடுத்திருந்தால் அதுதான் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்திருக்கும்.

 அதே நேரம் “பாஜக தலைவர்கள்  மசூதி இடிப்பை தடுக்க முயன்றார்கள்” என்று ஜட்ஜய்யா சொல்லியதைத்தான் ஏற்க முடியவில்லை.

 இந்த தீர்ப்பிற்கே நிச்சயம் பணி ஓய்வுக்குப் பின்பு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கிற போது  தேவையில்லாத பிட்டுக்கள் அவசியமே இல்லையே!

 காலை எழுதியிருந்த பதிவைப் படித்த பின்பு ஒரு தோழர் அலைபேசியில் அழைத்து 99 % நீதித்துறை கறை படிந்ததாகி விட்டது. மிச்சம் இருக்கிற 1 % ம்தான் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார்.

 அந்த 1 % நம்பிக்கை கூட இனி அவசியமில்லை என்று இன்று சொல்லி உள்ளார்கள். அவ்வளவுதான் . . .

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்பதும் உண்மையே . . .

 

8 comments:

  1. Last line clearly explains.reminds me National Poet Bharathi's poem Sathan vedam ordinal...

    ReplyDelete
  2. தோழர் பயமாக உள்ளது. நீதித்துறையின் நிலமை இப்படி இருந்தால் இந்தியாவின் நிலமை எங்கே போய்முடியும் என்பதை நினைக்கும் போது என்னத்த சொல்ல.

    ReplyDelete
  3. தோழர் பயமாக உள்ளது. நீதித்துறையின் நிலமை இப்படி இருந்தால் இந்தியாவின் நிலமை எங்கே போய்முடியும் என்பதை நினைக்கும் போது என்னத்த சொல்ல.

    ReplyDelete
  4. நீதிமன்றங்கள் ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கும் என்று நம் சங்கம் அறிவறுத்தி வந்தது.1975-ல் நாம் இழந்த போனஸ் பெற சொத்து உரிமையைப் பயன்படுத்தி வாதாடிப் பெற்றதாகச் சொன்னார்கள்.

    ReplyDelete
  5. சி பி ஐ ஆதாரங்களை நிரூபிக்க வில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது. அது குறித்து அதாவது சி பி ஐ பங்கு குறித்தும் நாம் பேச வேண்டாமா?

    ReplyDelete
  6. சி பி ஐ ஆதாரங்களை நிரூபிக்க வில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது. அது குறித்து அதாவது சி பி ஐ பங்கு குறித்தும் நாம் பேச வேண்டாமா?

    ReplyDelete
  7. India oru sarvaaathigaara nadaa'gi romba maasam aachaae. Idhula Enna adhirchi.

    ReplyDelete
  8. மசூதி இடிப்பதற்கே அவர்கள்தான் காரணம் என்பது உலகிற்கே தெரியும். நீதிபதிக்கு மட்டும் தெரியவில்லை

    ReplyDelete