Sunday, November 8, 2020

ராஜ தந்திரம் தோற்றுப் போச்சா?

 


 

ரஜினி எனும் அம்பு முனை மழுங்கிப் போனதால் விஜய் எனும் அம்பை எய்யலாம் என்ற பாஜகவின் பேராசை, திருப்பதி நாராயணன் போட்ட முகநூல் பதிவிலேயே தெரிந்தது.

 


ஆனால் பாவம் எனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்ற விஜயின் அறிக்கையில் அந்த புதிய அம்பும் முனை மழுங்கி மொக்கையாகி விட்டது.

 

தமிழகத்தில் தாமரையை மலர வைக்கும் அனைத்து ராஜ தந்திரங்களும் தோற்றுப் போனால் என்ன செய்வார்கள்!

 

ஆமாம், சின்ன டவுட்டு நாராயணா, ஒரு வேளை விஜய் உங்களை ஆதரித்தால் அப்போதும் நேர்மையாக அவரை ஜோசப் விஜய் என்றே அழைப்பீர்களா? எதற்கும் எச்.ராசாவை கேட்டுச் சொல்லவும்.

No comments:

Post a Comment