Wednesday, November 18, 2020

மகிழ்ச்சியுடன் ஒரு பகிர்வு

எங்களது தஞ்சை கோட்டச்சங்கத் தலைவர் தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




 *மகிழ்ச்சி... மகிழ்ச்சி...* கஜா புயல்... யாராலும் மறக்க முடியாத புயல். அதன் கோரத்தண்டவத்தில் பாதிக்கப்பட்டோர் ஏராளம். பாதிக்கப்பட்டோரை நோக்கி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் களத்திற்கு விரைந்தது. இலட்சக்கணக்கில் நிவாரணங்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்ட பலரில் *செல்வி G. சஹானா* என்கிற மாணவரும் ஒருவர். அரசுப்பள்ளி மாணவர். கஜாவால் வீடிழந்து நின்றார். ஏழ்மை அவரது எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியது. நன்றாகப் படிக்கக்கூடியவர். அவரது கனவு கானல் நீராகிவிடுமோ என்கிற கவலையோடு நம்மை அணுகினார்.

வீட்டை சரி செய்து, ஒரு மின் விளக்குக்கு மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தால் தன்னுடைய படிப்பு தடைபடாமலும், தான் விரும்பிய கல்வியைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையோடு உதவி கேட்டார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் சார்பாக அவருக்கு ரூ.25,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவர் நம்மோடு பரிமாறிக் கொண்டார். ஆம்.. அவருக்கு திருச்சி மருத்துவ கல்லூரியில் MBBS படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. AIIEA வழங்கிய நிவரணத்தில் வீட்டை சரி செய்து மின்வசதியை ஏற்படுத்திக் கொடுத்து நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்ததால்தான் தன்னால் படிக்க முடிந்தது எனப் பெருமையோடும், நன்றியோடும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதை தெரிவித்தார். அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்... பாராட்டுகள்...

நமது உதவி மிகச் சிறியதாக இருக்கலாம். ஒரு தலைமுறையின் வாழ்நிலையை மாற்றுகிற உதவி என்கிற வகையில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சி.

8 comments:

  1. இனிய செய்தி

    ReplyDelete
  2. மிகவும மகிழ்ச்சியான செய்தி. நமது எதிர்கால கடமையை திட்டமிட ஒரு சிறந்த உதாரணம். AIIEA வாழ்க.

    ReplyDelete
  3. மிகவும மகிழ்ச்சியான செய்தி. நமது எதிர்கால கடமையை திட்டமிட ஒரு சிறந்த உதாரணம். AIIEA வாழ்க.

    ReplyDelete
  4. மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல். தஞ்சை தோழர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. Concern for the helpless, poor people,and the downtrodden is the guidelines of AIIEA.Following cadres are its isset.Long live AIIEA.

    ReplyDelete
  6. நமது சங்கம் எடுக்கும் முடிவுகள் யாவும் நன்றாகவே உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் நமது சங்கம் முன்னெடுக்கவேண்டிய பாதையும் நங்கு விளங்குகிறது. தஞ்சைக் கோட்டத் தோழர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். அகில இந்திய இன்ஷ்யூரன்ஸ் ஊழியர் சங்கம் வாழ்க!

    ReplyDelete
  7. Congrats to Thanjavur comrades.
    LONG LIVE AIIEA LONG LIVE.

    ReplyDelete