Friday, November 6, 2020

அது வேறு மனுவா கமல்?

 


 

தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பக்கத்தில்தான் கமலஹாசனின் சென்ற வருடத்திய ட்விட்டர் பதிவை பார்த்தேன்.

 


மருதநாயகத்துப் பாடலையும் யூட்யூபில் பார்த்தேன். 2016 ம் வருடம் அந்த பாடல் பதிவாகியுள்ளது.

 ட்விட்டரில் கமலஹாசன் சொன்ன வாசகங்களோடுதான் பாடல் உள்ளது. அந்த பாடலின் காணொளியை பார்த்து விடுங்கள்.

 


இளையராஜாவின் குரல் மற்றும் இசையிலிருந்து தற்காலிகமாக வெளியே வாருங்கள்.

 மருதநாயகத்தின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை  மனு சொன்ன நீதி துரத்தியுள்ளது என்பதை உங்கள் பாடல் வரிகள் மூலமாக 2016 ல் சொல்லி மனுவை புழக்கத்துக்கு கொண்டு வந்தது நீங்களே.

 மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒடுக்கப் பட்ட மக்கள் மீது பொன்பரப்பியில் வெறித்தாக்குதல் நடத்தியது மனு சொன்ன நீதியின் அடிப்படையில்தான் என்பதை மீண்டும் உறுதிப் படுத்தி உள்ளீர்கள்.

 “பாஜக” வுடனும் கூட்டு வைப்பேன் என்று சொன்னதற்குப் பிறகு மனு எப்படி புழக்கத்தில் இல்லாமல் போய் விடுகிறார்?

 ஒரு வேளை உங்கள் பாடலிலும் 2019 ட்விட்டர் பதிவிலும் வருவது வேறு மனுவா?

 வடிவேலு சொல்லும் “நாற வாய், வேறு வாய்” போல?

No comments:

Post a Comment