Friday, November 13, 2020

ஆஜானையும் அழைச்சிக்கிட்டு போயிடுங்க லச்சூ!

 


 புமா ஆஜான் ,  தோழர் ஆதவன் தீட்சண்யா மீது அவதூறு செய்த  விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் புதியமாதவி சங்கரன் முகநூலில் இரண்டு பதிவுகளை எழுதியுள்ளார்.

 அவை இங்கே உள்ளது.

 முச்சந்தி ரொம்ப முக்கியமானது.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல..
இலக்கியவாதிகளுக்கும் தான்.
ஏஸி அரங்கிலோ மலையடிவாரத்திலோ
உட்கார்ந்து பேசி வளர்ப்பது மட்டுமல்ல
இலக்கியம்..
முச்சந்தியிலும் இலக்கியம் வளரும்.
வளர்ந்திருக்கிறது..

இலக்கியம் மனிதர்களுக்கானது என்றால்
முச்சந்தியில் இருப்பவர்களும் மனிதர்கள் தான்
என்பதை இலக்கியவாதிகள் மறந்துவிட்டார்கள்
என்றால்இலக்கியம்யாருக்காக?
முச்சந்தி

இலக்கியத்தையும் இலக்கிய பிதாமகன் களையும் விட
பெரியது. முக்கியமானது. மறந்துவிடாதீர்கள்!
முச்சந்தி இலக்கியம் முக்கியமானது.
முச்சந்தி அதைவிட முக்கியமானது!!!

இன்றைய பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சி
அல்லது நேற்றைய முச்சந்தி எழுச்சிக்கான காரணம்..
எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஜெயமோகனுக்கும்
உரையாடல்கள் விவாதங்கள் தொடர்கின்றன.
வக்கீல் கோர்ட் அபராதம் என்று
ஒரு திகில் படம் ரேஞ்ச்சுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
இருக்கட்டும்..

இதில் முச்சந்தி பற்றி பேசியாக வேண்டும்..
ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளர் மீது
போகிற போக்கில் தன் பதிவில் ஜெயமோகன்
அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டு
சொல்லும்படியான ஒரு கதை,
ஒரு வரி, எழுத ஆற்றலில்லாத
முச்சந்திப் பேச்சாளர்

அது எப்படி ஜெ.மோ….
நீங்கள் பேசுவதும் உங்கள் மேடைகளும்
இலக்கிய பீடங்களாகவும்
ஆதவன் தீட்சண்யா பேசுவது மட்டும்
முச்சந்தி பேச்சாகவும்..மாறி விடுகிறது!

ஆமாம்.. முச்சந்தி என்றால் என்ன கேவலமா?
முச்சந்தியில் இலக்கியம் பாய்ந்து ஓடாதா என்ன?
ஆதவன் தீட்சண்யாவுடன் உங்களுக்கு கருத்து
முரண்பாடுகள் இருக்கட்டும். அவர் செயல்பாடுகளுடன்
உங்களுக்கு ஒவ்வாமை கூட இருந்துவிட்டுப்
போகட்டும். அதெல்லாம் உங்கள் தனிப்பட்ட
விருப்பு வெறுப்பு சார்ந்தது. அவரவர் அரசியல்

ஆனால் ஜெ.மோ அதை நீங்கள் ஏன் ஒரு
இலக்கிய உலகத்தின் மதிப்பீடாக மாற்ற
முயற்சி செய்திருக்கின்றீர்கள் என்பது தான்
இலக்கிய சமூகத்தின் கருத்து சுதந்திரம்
உங்களிடம் வைக்கும் கேள்வி..

ஒருவர் எழுதுவதும் பேசுவதும்
இலக்கியமா இல்லையா
என்பதையும் அவர் எழுதிய வரிகளின் ஆற்றலையும்
தீர்மானிக்கும் அதிகாரம் இங்கே யாரிடமும் இல்லை
ஜெ.மோ
..
உங்களின் எழாம் உலகம் முதல் காடு வரை
வாசித்திருக்கிறேன்
ஆதவன் தீட்சண்யாவையும் வாசித்திருக்கிறேன்.

ஒரு வாசகனாக எங்கள் உரிமையை
நீங்கள் எடுத்துக்கொண்டு பேச வேண்டாம்.
எது ஆற்றல் மிக்கது
எது நிற்கும் எது நிற்காது
இதெல்லாம்காலம் தீர்மானிக்கும்.
முச்சந்திகளும் தீர்மானிக்கும்.

அதற்கு ஆஜானின் பிரதான குண்டர் லச்சுமி மணிவண்ணனின் கண்ணியமான அழகியல் எதிர்வினை இங்கே.


இருக்கிறது
Puthiyamaadhavi Sankaran
.அப்படி தீர்மானிப்பதற்கும் தெளிவு பெறுவதற்குமே படிப்பது,எழுதுவது மேலானவற்றை தேடுவது எல்லாம்.காலத்தால் இது சிறந்து நிற்கும் என கணித்து சொல்லத் தெரியாதவர்கள் மடையர்கள். முச்சந்தியாளர்கள்.சாதாரணர்கள்.சராசரிகள்.
மேன்மக்கள் சொல்லிவிடுவார்கள்.

இலக்கியத்தில் என்றில்லை
அனைத்து துறைகளிலும் அப்படி கணித்துச் சொல்லும் வல்லமை கொண்டவர்கள் உண்டு.அவர்களே முதல்தரமானவர்கள்.அவர்களாலேயே அந்தத் துறை பங்களிப்பு பெறுகிறது. முச்சந்தியாளர்களும் அவர்களும் ஒன்று அல்லர்.முச்சந்தியாளர்களிடம் ஆலோசனை பெற்று எங்கும்,எந்த துறையிலும் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.

திண்ணைப்புரளிப் பேச்சுகளும் சபைகளும் ஒன்று அல்ல.அப்படி ஒருவர் விரும்புவாரெனில் அவர் திண்ணைக் கிசுகிசுகளிலேயே நின்று விடலாமே ? எதற்காக சான்றோர் அவைகளுக்குத் தேடிவரவேண்டும் ?

மேன்மையும்,தாழ்ச்சியும் அனைவரின் கண்முன்னரும் உள்ளவையே.நீங்கள் கட்சி கட்டி ஆடுங்கள் அதில் பிரச்சனை இல்லை.அதற்காக எல்லாம் ஒன்றே வகை இடியட் ஆர்க்யூமென்ட்ஸ் வேண்டாம்.பூமியில் வாழும் ஒவ்வொரு ஜந்துவும் மேன்மை எது ? என்பதனையும் தாழ்ச்சியையும் அறியும்.மிகவும் நன்றாக அறியும்

 உங்கள் ஆக்யுமேன்ட் மிகவும் முட்டாள்த்தனமானதுமூடர்களுக்கேயுரியதுஇந்த வகை ஆர்க்யூமென்ட்ஸ் மூடர்களால் மூடர்களுக்காக உருவாக்கபட்டு மூடர்களால் கடைபிடிக்கப் படுகிறது.பல மூடர்கள் இதனை ஒரு ஆர்க்யூமென்ட் போல முன்வைக்க பழகியிருக்கிறார்கள்.மிகவும் தவறான பழக்கம் இது.மதிப்பீடுகளும் சாதாரணமும் ஒன்று அல்ல.சராசரிகளும் அசாதரணமும் ஒன்று அல்ல.மேலான விஷயங்களும் தாழ்வும் ஒன்று அல்ல.மகத்துவமும் மண்புழுவும் ஒன்று அல்ல.அப்படியானால் உங்கள் மூளை உடனடியாக மண் புழு மகத்துவம் இல்லையா? என கேட்க உங்களைப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.very very sad.take care urself

 விஷயங்களைப் பற்றி பேசுவது,விஷயங்களில் மேலதிகமாக புரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்பதற்காத்தானே அன்றி ,சிறந்த பதிலாக கருதப்படும் என்ன பதிலை திருப்பிச் சொல்லலாம் என்பதற்காக அல்ல.

உங்கள் பதிலைத் திருப்பி ஒருமுறை யோசிக்க முடிந்தால் யோசித்துப்பாருங்கள்.புகார்களாக உள்ளன.எதிர்மனுதாருக்கு எதிரான புகார்களாக...சார்ஜஸ் ஆக...ஏன்?

இப்படி விஷயங்களைப் பேசுதல் குறைபாடானது.அது உரையாடலுக்கே எதிரானது.இங்கே உரையாடும் பலர் இப்படியே உரையாடலில் ஈடுபடுகிறார்கள்.

முடிவுக்கு வந்து விடுகிறேன். என்ன முடிவுக்கு ?முன்முடிவு ? இதில் என்ன முன்முடிவு?

நீங்கள் வாசித்ததெல்லாம் ஜெயமோகனும் ,ஆதவன் தீட்சண்யாவும் ஒருவரே என்பதற்காயின் உங்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.very sad🙏 இதையே நான் சொல்லியிருக்கிறேன்.

அப்படித்தானா என்பதை என்னிடம் கேட்க வேண்டும் என்பதில்லை.நல்ல வாசகர்களிடம் அப்படித்தானா? என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிரித்தால் சிரிப்பது ,உரையாடலில் என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருப்பதெல்லாம் பயங்கர அலுப்பூட்டும் செயல்கள்.;மட்டுமல்ல.மடையர்களின் செயல்கள்.

இப்படியான உடனடிச் சிறுமைகளில் இறங்காமல் பேசுங்கள்.என்னை பொறுத்தவரையில் ஒன்றை எளிமையாகச் சொல்கிறேன்.ஜெயமோகனும் ,ஆதவன் தீட்சண்யாவும் ஒன்றாகில் நான் இலக்கியத்தை விட்டே சென்று விடுவேன்.🙃இத்தகைய மடையர்கள் சூழ் உலகு எனக்கு அவசியமில்லை

ஆஜான் உருவாக்கியுள்ள  ஞான மரபுப் பாரம்பரியம் இதுதான். ஆஜானின் பிரதான சிஷ்யை ஒருவர் உள்ளார். அதிமுகவை ஆதரிக்கும் அந்த சங்கியின் வார்த்தைகளில் திமிரும் ஆணவமும் மட்டுமே இருக்கும்.

 இதிலே இவர் ஜெமோவுக்கு எதிர்வினையாற்றிய தோழர் யமுனா ராஜேந்திரன், புலியூர் முருகேசன் போன்றவர்களை நாய்கள் என்றார். தோழர் புலியூர் முருகேசன் போட்ட பின்னூட்டங்களை அகற்றி விட்டார்.

 அதே போல தோழர் புதியமாதவி சங்கரன் பின்னூட்டங்கள் போட்டால் அகற்றி விடுவேன் என்று சொல்கிறார்.

 இவர்கள்தான் கருத்துரிமையை பாதுகாக்க வந்த காவலர்களாம். “என் மீது ஏனய்யா கொலைப்பழி சுமத்தினாய்?” என்று கேட்பவர்கள் பாசிஸ்டுகளாம்!

 தோழர் இரா.எட்வின் ஒரு பதிவில் கேட்டது போல இந்த விஷ்ணுபுரம் வெண்முரசு வகையறாக்களின் மனதில் ஜாதி மேலாதிக்க வெறி மண்டிக் கிடக்கிறது என்றே  சொல்ல வேண்டியுள்ளது.

 இலக்கியத்தில் தரம் பிரிக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நான்தான்  தமிழின் தலை சிறந்த எழுத்தாளன் என்று தனக்குத்தானே முடி சூட்டிக் கொள்ளட்டும். அப்படி கற்பனை செய்து கொள்ள அவர்களுக்கு உதாரணம் உள்ளது.

 சுந்தர ராமசாமியும் சு.சமுத்திரமும் ஒன்றா என்ற ஒப்பீடு எந்த அடிப்படையில் எழுகிறது? விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளை எழுதினால் அவர் இவர்களுக்கு தரம் தாழ்ந்த எழுத்தாளரா? இந்த சாடலில் ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை!

 என்னுடைய பார்வையில் தோழர் ஆதவன் தீட்சண்யா, ஆஜானை விட மேலான எழுத்தாளர்தான். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை எழுதுபவர்கள், திருட்டுக்கதைக்கு வசனம் எழுதிய ஜெமோ வை விட சிறந்த படைப்பாளிகள்தான். 

னென்றால் தோழர் ஆதவன் தீட்சண்யா, மக்களை எழுதுபவர், மக்களின் பிரச்சினைகளை, துயரத்தை, போராட்டத்தை எழுதுபவர், அதிகாரத்தை கேள்வி கேட்பவர், அதிகாரத்தை பகடி செய்பவர், அதிகாரத்திற்கு எதிராக போராடத் தூண்டுபவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக அவர் எழுத்து அமையும். உழைக்கும் மக்களை சுரண்டுபவர்களை சாடும். வார்த்தை ஜாலத்தில் மயங்க வைத்து பொய்மையெனும் போதையில் மூழ்க வைக்கும் எழுத்தல்ல. அதனால்தான் சொல்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேலாக வாசிப்பை சுவாசிப்பவனாக சொல்கிறேன். ஆஜானால் ஆதவனை நெருங்க முடியாது. உண்மையை நெருங்க முடியாது.

 ஆமாம், இந்த அதிகாரம் என்ன உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா லச்சூ? உமக்கு அந்த அதிகாரம் உண்டென்றால் நிச்சயம் எனக்கும் உண்டு. மேன்மக்களுக்குத்தான் அந்த உரிமை என்றெல்லாம் நீங்கள் பட்டா போட முடியாது. 

 ஆகவே திரு லச்சுமி மணிவண்ணன் அவர்களே, ஆதவன், ஆஜானை விட மேல் என்பதால் நீங்கள் இலக்கிய உலகிலிருந்து வெளியேறி விடுங்கள். அப்படியே உங்கள் ஆஜானையும் அவருடைய குண்டர் படையின் இதர உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு அவருடைய தாய்மொழியான மலையாளம் பேசப்படும் கேரளத்திற்கே கூட்டிச் செல்லுங்கள்.

 உங்க வகையறாக்கள் இல்லாமல் தமிழ் இலக்கிய உலகம் நன்றாகவே இருக்கும்.

 

No comments:

Post a Comment