கிஷோர் கே சுவாமி என்ற வெறியனைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அந்த அநாகரீகப் பேர்வழி பற்றி எழுத்தாளர் வினாயக முருகன் எழுதியிருந்த முகநூல் பதிவு கீழே.
பிரியாணி ஓசியில் சாப்பிட்ட நன்றி கூட இல்லையே அந்த மனிதனுக்கு!
2015ஆம் வருடம் இதே நவம்பர் மாதம் சென்னை பெருவெள்ளத்தின்போது எங்கள் பகுதி முழுக்க வெள்ளம். மின் இணைப்பு இல்லை. எனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வளசரவாக்கத்திலிருந்து மேற்கு கேகேநகரில் இருக்கும் எனது சகோதரி வீட்டுக்கு நடந்துச் சென்றேன். எனது சகோதரியின் வீடு பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸ் அதாவது டிஸ்கவரிபுக்பேலஸ் பின்னால் இருக்கிறது. இடுப்பளவு நீரில் நடந்துச்சென்று அங்கே போனேன்.
செல்லும் வழியில் ஓர் இஸ்லாமியர் எல்லாருக்கும் இலவசமாக பிரியாணி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர்க்கு இலவசமாக பிரியாணி கொடுப்பது சாதாரண வேலை இல்லை. மிகுந்த பொருட்செலவு ஆகும். அந்தக்கடை வாசலில் ஒல்லியாக வெடவெடென கஞ்சா அடிக்ட்போல ஓர் இளைஞன் நின்றிருந்தான். பிரியாணி வாங்க நீண்டவரிசை நின்றிருந்தது. அவனும் வரிசையில் நின்றிருந்தான். அவனை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பேஸ்புக்கில் நாங்கள் எல்லாரும் கழுவி ஊற்றும் அந்த இளைஞனை அங்கு பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேஸ்புக்கில் எப்போதும் இஸ்லாமியர்களை திட்டி சங்கிகளுக்கு ஆதரவாக பதிவு எழுதும் அந்த நபர் வசிப்பது கேகேநகரில். ஒருகாலத்தில் அதிமுக சார்பாக களமாடி பிறகு காங்கிரஸ் பக்கம் போனான். ஜோதிமணி அவனை வரவேற்று பதிவிட்டார். பிறகு பிஜேபி பக்கம் போய் சேர்ந்தான். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை நலம் என்று செய்திவந்தகாலத்தில் சாலையில் குத்தாட்டம் போட்டான். இன்று பார்க்கிறேன். அந்த இளைஞன் இப்படி பேஸ்புக்கில் பதிவு எழுதியுள்ளான்.
இந்த புயலை முன்னிட்டு இஸ்லாமியர்கள் உதவி செய்வார்கள். நமது இந்து சகோதரர்கள் ஏமாறவேண்டாம்.
2015- நவம்பரில் ஒரு பாய்கடை முன்பு பிரியாணிக்காக அவன் வரிசையில் நின்ற காட்சி நினைவுக்கு வருகிறது .
No comments:
Post a Comment