Tuesday, November 3, 2020

வட துருவத்தை காணோம் சார் . . .

 


ஃப்ரண்ட்லைன்  ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு. அன்றிலிருந்து இன்று வரை கதை விடுவதே சங்கிகளின் பிழைப்பு என்பதை  அம்பலப்படுத்தும் பதிவு.

 கிணற்றை காணவில்லை என்று வடிவேலு போல ஏன் கேஸ் கொடுக்கவில்லை என்றுதான் தெரியவில்லை.

 கேஸ் கொடுத்தால் இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க சில நூறு கோடிகள் கொடுத்தது போல இதற்கும் நிர்மலா அம்மையார் நிதி கொடுத்திருப்பார்.

  

ஆர்.எஸ்.எஸ். குரு: ‘இங்கே இருந்த வட துருவத்தைக் காணவில்லை சார்

 இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத் தலைவர் பால கங்காதர திலகர் 1903இல் வேதங்களில் வரும் ஆர்க்டிக் வீடு (Arctic Home in the Vedas) என்கிற புத்தகம் எழுதினார். ஆரியர்கள் வட துருவத்தில் இருக்கும் ஆர்க்டிக் பகுதியில்தான் வாழ்ந்தனரென்றும் கி.மு. 8000 வாக்கில் பனி யுகம் முடிந்து பெரும் பிரளயம் ஏற்பட்ட காலத்தில புதிய நிலப் பரப்பைத் தேடி ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கும் ஆசியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றனர் என்றும் எழுதிய திலகர் வேதங்களிலும், ஜொராஸ்டிரிய மத நூல்களிலும் இதற்கான ஆதாரங்களில் இருக்கிறது எனப் பல விவரங்களைக் கொடுத்துள்ளார்.



 அதில் என்ன உங்களுக்குப் பிரச்சினை என்பது நீங்கள் கேட்கலாம். பிரச்சினை ஆர்.எஸ்.எஸ்சுக்குத்தான்ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று இன்றும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு திலகரின் புத்தம் தர்மசங்கடத்தை உருவாக்கியது. எப்படி இதைச் சமாளிப்பது என யோசித்தார் ஒரு பெரியவர்.

 அவர்நம்மை மற்றும் நம் தேசத்தை வரையறுப்பது’ (We or Our Nationhood Defined) என்று 1939இல் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் அட்டஹாசமான விளக்கம் அளித்தார். அதுதான் இது:

 முன்பு ஒரு காலத்தில் ஆர்க்டிக் பிரதேசம் உண்மையில் இன்று பீஹார், ஒரிசா என்றழைக்கப் படும் பிரதேசத்தில்தான் இருந்தது. பிறகு அது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. பிறகு சிறிது காலம் மேற்குத் திசையிலும், மீண்டும் வடக்கு நோக்கியும் நகர்ந்த ஆர்க்டிக் பிரதேசம் கடைசியாக தற்போது அது இருக்கும் இடத்தை அடைந்தது



 இதை எழுதிய பெரியவரின் பெயர் ஆர்.எஸ்.எஸ். ஆட்களால் குரு என்று அழைக்கப்பட்ட கோல்வால்கர். 1940 முதல் 1973இல் இறக்கும் வரையில் ஆர்.எஸ்.எஸ்சின் சர்சங்சாலக் எனப்படும் தலைவராக இருந்தவர்.

 இந்த விஷயத்தை சிபிஐ எம் தலைவர் சீதாராம் யெச்சூரிஇந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ என்று ஃபிரண்ட்லைனுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆர்க்டிக் பகுதி அப்படி நகர்ந்து சென்ற போது அதன் மீதிருந்த ஆரியர்களை மட்டும் விட்டுச் சென்று விட்டதா? புவியியல் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட காலத்தில் இப்படி அபத்தமாக எழுத முடியுமென்று கேள்வியும் எழுப்பினார். இந்தக் கட்டுரை பின்னர் ஃபிரண்ட்லைன் பதிப்பாக சிறு நூலாகவும்  வெளியிடப்பட்டது.

 குருவே இப்படி இருக்கும் போது புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி, அணு குண்டு ஆகியவை வேதகாலத்திலும் பின்னர் புராண காலத்திலும் இருந்தது என சிஷ்யர்கள் பேசுவதில் ஆச்சரியம் இல்லை.

 

No comments:

Post a Comment