Friday, November 13, 2020

புதிய அடிமை நிதீஷ்குமார்

 



 நிதீஷ்குமார் மீண்டும் பீகாரின் புதிய முதல்வராகப் போகிறாராம். வாழ்த்துக்கள் சொல்வதை விட அனுதாபம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

 ஆர்.ஜே.டி, காங்கிரஸ் இணைந்த கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகி அந்த கூட்டணியை அப்படியே உதறித்தள்ளி பாஜகவோடு கை கோர்த்து முதல்வராக நீடித்த நிதீஷ்குமாரின் கட்சி பெற்ற எம்.எல்.ஏக்களை விட கூடுதல் எம்.எல்.ஏ க்களை வைத்திருந்தும் நிதீஷ்குமாரே முதல்வராக இருக்கட்டும் என்று  பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துள்ளது.

 முதலில் நிதீஷ்குமார் எத்தனை நாள் முதல்வராக இருப்பார் என்று பார்க்க வேண்டும். திரிபுராவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. அதை அப்படியே  தன் எம்.எல்.ஏ க்களாக நிறம் மாற்றி விட்டது பாஜக. திரிபுரா மாநில பாஜகவில் பெரும்பாலானவர்கள் முன்னாள் காங்கிரஸ்காரர்களே!

 குஜராத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியது. குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற இந்த வணிகம் உதவியது என்றால் ம.பி யில் ஆட்சியையே பிடிக்க முடிந்தது. ராஜஸ்தானில்தான் டீலிங் முடியும் முன்பாக காங்கிரஸ் கட்சி விலை போக இருந்தவர்களோடு சமரசம் செய்து கொண்டுவிட்டது.

 இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிற பாஜக நிச்சயம் எல்லா கட்சிகளில் இருந்தும் எம்.எல்.ஏ க்களை இழுக்கும். எங்களை அலட்சியப் படுத்திய எதிர்க்கட்சிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்தோம் என்று சொல்கிற உவைஸி கூட பாஜகவை ஆதரிக்கலாம். கம்யூனிஸ்டுகளை மட்டும் அவர்களால் நெருங்க முடியாது.  ஆகவே நிதீஷ்குமாரின் நாற்காலி எப்போது வேண்டுமானால் கவிழலாம்.

 அதுவரையிலும் கூட அவருக்கு எந்த சுதந்திரமும் இருக்கப் போவதில்லை.

 ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத போதே எடப்பாடியை ஆட்டி வைக்கிற பாஜக, நிதீஷ்குமாரை விட கூடுதல் எம்.எல்.ஏ க்கள் இருக்கிற போது அவரை என்னவெல்லாம் செய்யும்?

 பாவம் நிதீஷ்குமார்.

பிகு

கார்ட்டூன் நன்றி திரு சுரேந்திரா, தி ஹிந்து.

மாலையில் பக்தாளுக்கு அவர் அளித்த சூடான பதில் 

 

No comments:

Post a Comment