ஒரு மில் எப்படி ஏழு மில் ஆயிற்று? 50 ஏக்கர் எப்படி ஐயாயிரம் ஏக்கராயிற்று? மூன்று லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் எங்கிருந்து வந்தது? நாம் கணக்கில் சொன்ன பொய். நாம் தொழிலாளிகளிடம் சொன்ன பொய். நாம் வருமான வரியில் சொன்ன பொய்.’
(இன்று தொலைக்காட்சியில் பார்த்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வரும் வசனம்.)
எங்கள் ஓய்வு பெற்ற அலுவலர் தோழர் ரமணன், முக நூலில் போட்டிருந்த பதிவு அது.
அந்த உணர்ச்சிகரமான காட்சியை முதலில் பாருங்கள்.
"உயர்ந்த மனிதன்" திரைப்படம் வெளியான 1968 காலகட்டத்தில் பொய் சொல்வதன் மூலமாக செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை குவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால்
இப்போது அவர்கள் அப்படி பொய் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அவர்களின் செல்வத்தை பெருக்கும் தரகர்களாக ஆட்சியாளர்கள் மாறி விட்டார்கள்.
முதலாளிகளுக்காக முதலாளிகள் நடத்தும் முதலாளிகள் ஆட்சியில் கொள்கைகள் அவர்களுக்கு சாதகமாகவே வடிவமைக்கப்படுகிறது.
மக்களின் வரிப்பணத்தாலும் உழைப்பாலும் வியர்வையாலும் உருவான தேசத்தின் செல்வாதாரங்களான பொதுத்துறை நிறுவனங்கள் தங்கத் தட்டில் வைத்து தாரை வார்க்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் நீக்கப்பட்டு பதுக்கல் சட்டபூர்வமாக மாற்றப்பட்டு விட்டது.
பெரு முதலாளிகள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கினாலும் திருப்பிக் கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. Hair Cut என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
வரி கட்டாமல் ஏய்க்க வேண்டாம். அரசே வசூலிக்கப்படாத வரி என்று ஒற்றை வார்த்தையில் கை கழுவி விடும்.
ஆக, இன்றைய காலகட்டத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியத்தை முதலாளிகளுக்கு ஆட்சியாளர்கள் உருவாக்கவில்லை.
இந்த அநீதிக்கு எதிராகத்தான் நாளை மறு நாள், 26, நவம்பர், 2020 அன்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,
மத்தியரசின் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்தவுள்ளனர்.
மாறும்.
அனைத்தும் நிச்சயம் மாறும்.
No comments:
Post a Comment