அரசு
மருத்துவமனைகளின் பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை நாம் புரிந்து கொள்ள,
அரசு
மருத்துவமனைகளின் தேவையையும் முக்கியத்தையும் நாம் உணர்ந்து கொள்ள
ஒரு
கொரோனா வர வேண்டி உள்ளது.
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக்கியமான
பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
“உயிருக்காக
போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கை விரிப்பது ஒரு
கொலைக்குச் சமம்”
எவ்வளவு
காத்திரமான வரிகள் இவை!
இந்த
கொரோனா காலத்தில் தனியார் மருத்துவ மனைகள் எத்தனை கொலைகளை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதை
நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
"உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம்" !
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 30 வயோதிகர்களை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தொடர்ச்சியாக பராமரித்து கொண்டிருக்கிறது என்கிற செய்தி நேற்றைய புதிய தலைமுறை யில் ஒளிபரப்பாகியது .அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த திரு. சுகன்யாவிடம் Suganya
Mercy Bai நான் பேசும்போது
"உண்மையில் அவர்களை பராமரித்து கொண்டிருக்கும் 20 வயது இளைஞர் ஒருவரது பெயரைச் சொல்ல மறந்து விட்டோம் .என்னால் அந்த இடத்தில் இரண்டு மணி நேரம் கூட நிற்க முடியவில்லை .ஆயினும் அந்த இளைஞர்(கௌரிசங்கர் -வார்டுபாய்) தொடர்ச்சியாக இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
அதோடு மட்டுமின்றி பொதுவாக அவர்களைப் பராமரிக்க ராஜீவ்காந்தி மருத்துவமனை எடுத்துக் கொண்டிருக்கும் பல்வேறு முயற்சிகளையும் தெரிவித்தார்.
உண்மையிலேயே இப்படி ஒரு பணியை எந்த தனியார் மருத்துவமனையாவது செய்கிறதா என்று தேடினால் அப்படி ஒரு மருத்துவமனையை நீங்கள் பார்க்கவே முடியாது.
நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இந்த பேச்சின் ஊடாக சுகன்யா "அரசு மருத்துவமனைகள் எத்தனை உயிர்களை எப்படி எல்லாம் போராடி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நேரில் சென்று நீங்கள் பார்க்கவேண்டும்" என்று குறிப்பிட்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன்கள் தான் அங்கு செல்லும் நேரமெல்லாம் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். இப்படி ஒரு அர்ப்பணிப்பு பாராட்டப்படாமலேயே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னது உண்மைதான். ஏதாவது மருத்துவமனையில் தவறுகள் நேர்ந்து விட்டால் உடனடியாக நாம் விமர்சிக்கும் அதே சமயம் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி இத்தகைய மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை நோக்க பூர்வமாக இல்லை என்றாலும் கவனம் செலுத்துவது இல்லை .
இது குறித்து மேலும் விபரங்களை தெரிந்து கொள்வதற்காக சிலரிடம் பேசியபோது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் 575 பேர் என்று குறிப்பிட்டார் .வேறு சிலரும் கூட இதுபற்றி கூறும்போது இந்தியாவிலேயே வேறு எங்கும் இத்தனை நோயாளிகள் இந்தக் காலத்தில் டயாலிசிஸ் செய்து கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்கு காரணம் என்ன திடீரென ஏன் இந்த எண்ணிக்கை இப்படி உயர்ந்திருக்கிறது என்று கேட்டபோது இவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்கள் என்றும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏதோ ஒரு வகையில் தொற்று ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்டவர்கள் என்றும் இன்னும் சிலருக்கு நோய்த் தொற்றுஏற்பட்டால் என்ன செய்வது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இதை எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று கேட்டேன் அவர் தெரிவித்த பதில்
" இது வேறு ஒரு தொழில் இல்லையே! உயிர் காக்கும் பணி அல்லவா உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒருவர் உங்களிடம் வந்து நிற்கிறபோது மருத்துவம் பார்க்க இயலாது என்று கைவிரிப்பது ஒரு கொலைக்குச் சமம் எனவே எங்களிடம் இருக்கக்கூடிய கட்டமைப்புகளையும் திறமையையும் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த உயிர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறோம்"
என்று கூறினார் .
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் Therani Rajan, மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் நாம் பாராட்டுகள்.வணக்கங்கள்.அன்பும் மகிழ்ச்சியும்
நெகிழ்ச்சியும், மனித நேயம் மட்டுமே இப்பூலகை காக்கும் என்பதே....
ReplyDeleteசிறக்கட்டும்...அவர்களது பணி..
Dr.Thernirajan , wherever he is there we see humane
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete