Thursday, November 12, 2020

அடப்பாவிகளா, இதுக்கா அவ்வளவு அவசரம்!

 


மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

 ஒரு பொலீரோ விடாமல் ஹாரன் அடித்த படி பின்னே வந்து கொண்டிருந்தது. அதன் இரைச்சலில் எல்லோருமே ஒதுங்கிப் போனார்கள். மேய்ச்சல் முடிந்து திரும்பிய எருமைகள் (எந்த குறியீடும் இல்லை, நிஜமாகவே எருமைகள்தான். அவற்றின் நேரமும் 10 – 5 தான் போல. அலுவகம் செல்லும் போதும் திரும்பும் போதும் கண்டிப்பாக அவை குறுக்கிடும்)

 எருமைகள் குறுக்கிட்டதால் பொலீரோ நின்று விட்டது. ஹாரனின் ஒலி அதிகரித்தது. எருமைகள் கடந்த இரண்டு நிமிடமும் மற்ற பயணிகளிக்கு பொலீரோவின் ஹாரன் சத்தத்தோடுதான் கடந்தது. உடல் நலம் இல்லாத யாரையோ மருத்துவமனையில் சேர்க்கத்தான் இந்த வேகம் என்று நினைத்திருந்தேன்.

 ஒரு நிமிடம் கூட முடியவில்லை.

 மீண்டும் வேகமாக புறப்பட்ட வாகனம் சட்டென்று இடது பக்கம் திரும்பியது. அங்கே ஒரு சின்ன காம்ப்ளெக்ஸ், அதன் முன்னே கணிசமான இடம் உண்டு. அந்த இடத்தில் வண்டியை நிறுத்தியதும் இன்ஜினை அணைக்காமல் ஓட்டுனர் உள்ளேயே இருந்தார்.. இரண்டு பேர் வேகமாக அந்த காம்ப்ளெக்ஸை நோக்கி வேகமாக ஓடினார்கள்.

 அந்த காம்ப்ளெக்ஸில் ஏதாவது மருந்துக் கடை இருந்ததா?

 ஆமாம்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


 அந்த மருந்துக் கடைக்குப் பெயர் டாஸ்மாக்.

 அடப்பாவிகளா, இதற்கா இவ்வளவு அவசரம்?

பிகு: இந்த வருட தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விட்டீர்கள் அல்லவா? உங்கள் காட்டில் மழைதான் , , ,

 

 

No comments:

Post a Comment