முச்சந்தி எழுத்தாளர்
நீதானய்யா புளிச்ச மாவு
கீழே
நீல நிறத்தில் உள்ளது ஆஜான் புளிச்ச மாவின் மிரட்டல். அவர் மண்டையில் உள்ள அனைத்து
வக்கிரங்களும் ஒரே பதிவில் கொண்டு வந்து கொட்டி விட்டார்.
கண்ணியமிக்க
இந்த எழுத்தாளன் எப்போதும் வலியுறுத்தும் அழகியலை இந்த பதிவில் எங்கேயும் காண முடியவில்லை.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று எழுத்தாளர்களை எல்லை மீறி மிரட்டும் ஒரு மாஃபியா கும்பலாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் முகமாக ஆதவன் தீட்சண்யா ஆகியிருக்கிறார். முச்சந்திமொழியில் எழுத்தாளர்களை வசைபாடுவது, இலக்கியத்தின் எந்த நுட்பங்களையும் புரிந்துகொள்ளாத மொண்ணை மூர்க்கம் ஆகியவற்றுடன் இவ்வாறு வழக்குதொடுத்து மிரட்டும் போக்கையில் இவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.
சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அறியப்பட்ட எழுத்தாளர்களிடம் தொடங்கும் இச்செயல்பாடு நாளை அத்தனை பேர் மேலும் திரும்பும். இதைச் செய்வதே எங்களை மிரட்டுவதன் வழியாக தொடக்க நிலை படைப்பாளிகளை மேலும் அச்சுறுத்தும்பொருட்டுதான்.
தமிழ் சிந்தனைச்சூழலையே சீரழிக்கிறது இந்த மாஃபியா கும்பல். கருத்துச்செயல்பாடு என்றால் என்னவென்றே அறியாத அறிவிலிகளின் கூடாரம் இது. சென்ற இருபத்தைந்தாண்டுகளில் இவர்கள் இலக்கியம் மீது தொடுத்த தாக்குதல்களின் தரம் என்ன என்று பார்த்தவர்கள் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்வது மிக எளிது. கருத்து என்பது தாங்கள் பிறர்மேல் தொடுக்கும் கீழ்த்தரத் தாக்குதல். தங்கள் கீழ்மையைச் சுட்டிக்காட்டும் எதுவும் குற்ற நடவடிக்கைகள், வழக்குகள் வழியாக எதிர்கொள்ளப்படவேண்டியவை. இதுதான் இவர்களின் நிலைபாடு
இந்த மாஃபியா கும்பலுக்கு நிதியும் கட்சிப்பின்னணியும் உண்டு. இன்று சொல்லும்படியான எந்த எழுத்தாளரும் இவர்களின் அணியில் இல்லை. இலக்கியச் செயல்பாடு என்பதே இல்லை. இலக்கியவாதிகளை மிரட்டுவது மட்டுமே இவர்களின் பங்களிப்பு. இவர்கள் இக்காலகட்டத்தில் ஆற்றிய ஒரே பங்களிப்பு இதுதான் என அத்தனை இலக்கிய வரலாற்றிலும் பதிவு செய்ய
வேண்டும் என நினைக்கிறேன்.
தனிமனிதர்களாகிய எழுத்தாளர்கள் இந்த மாஃபியாக் கூட்டத்தின் கூட்டு மிரட்டலுக்கு அஞ்சி இவர்கள் பொதுவெளியில் உமிழும் வசைகளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மொண்ணையான தாக்குதல்கள் முன் அமைதி காக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நகுலன் இறந்து சில அஞ்சலிக் கட்டுரைகள் வெளிவந்தபோது தன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த விசை இதழில் ‘செத்தவன் சடலத்தை வைத்துக்கொண்டு எத்தனை ஒப்பாரி பாடுகிறார்கள்’ என்று எழுதியவர் ஆதவன் தீட்சண்யா. சொல்லும்படியான ஒரு கதை, ஒருவரி எழுத ஆற்றலில்லாத முச்சந்திப்பேச்சாளர். அவர் தலைமையில் அதைவிட தகுதியற்றவர்கள் திரண்டு இந்த மிரட்டல் நிகழும்போது, தீண்டாமை வழக்கு உட்பட அத்தனை சட்டக்குறுக்குவழிகளையும் இவர்கள் நாடும்போது, இந்த குண்டர்முறையை அஞ்சி வாளாவிருப்பதே ஒரே வழியாக இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது
ஆனால் இதை அஞ்சப்போவதில்லை, உரியமுறையில் எதிர் கொள்வோம். எனக்காக மட்டுமல்ல, இங்கே இலக்கியவாதிகளுக்கும் கருத்தும் விமர்சனமும் சொல்லும் உரிமை உண்டு என்பதற்காக
பெரிய நியாயவான், தர்மவான் போல எழுதியுள்ள இவர் கொஞ்சம் தான்
யார் யார் பற்றி என்னவெல்லாம் எழுதியுள்ளோம் என்று நினைத்துப் பார்த்திருந்தால்
தன் மீதே காறி உமிழ்ந்து கொள்ள வேண்டும். இவர் பேசாத பேச்சா? இவர் சொல்லாத அவதூறா?
ஊடகங்களில் பணியாற்றும் பெண்களைப் பற்றி சிப்பு சேகர்
பேசியதற்கு இணையான கீழ்மையான பேச்சை இவர் பெண் எழுத்தாளர்கள் பற்றி பேசியுள்ளார்.
திண்டுக்கல் மக்களின் அபிமானத்தைப் பெற்று மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் பாலபாரதியை அவதூறு செய்தது யார்?
இன்குலாப், சுஜாதா, அசோகமித்திரன், தஞ்சை பிரகாஷ், கந்தர்வன்
என்று எத்தனை பேர் பற்றி அவர்கள் இறந்து போன பின்பு கேவலமாக பொய்யாக
எழுதியுள்ளார்!
இன்று இவர் பரிவு காட்டும் சுந்தரசாமி பற்றி கோவை ஞானியின்
மறைவை ஒட்டி எழுதிய பதிவுகளில் எத்தனை வன்மத்தை கக்கினார்!
பா.செயப்பிரகாசத்தைப் பற்றி ஜாதி வெறியர் என்று அவதூறு
சொன்னார். அது அவரது கருத்துரிமை என்றால் அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிடும்
கருத்துரிமை மற்றவர்களுக்கு கிடையாதா? அப்படி கையெழுத்திட்டவர்களின் வேலையை
பறித்து விடுவேன் என்று இவர் மிரட்டியது உன்னதமான அழகியல் மரபா?
ஒரு சாதாரண புளிச்ச மாவு பிரச்சினையில் போலீஸ் கேஸை வலிமைப்
படுத்த மருத்துவமனையில் சீன் போட்டவர்கள் எல்லாம் நேர்மையைப் பற்றி பேசுவதெல்லாம் காலக் கொடுமை.
அந்த சர்ச்சைக்குரிய கதையை சமீபத்தில்தான் படித்தேன். ஜாதிய
மேலாதிக்க சிந்தனையோடு எழுதப்பட்ட கதைதான் என்பது சரிதான். அதை கண்டிக்கிற கருத்துரிமை
மற்றவர்களுக்கு கிடையாதா? அந்த விமர்சனத்தால் அவர் இறந்து போனார் என்று அபாண்டமாக
அவதூறு செய்தால் “எவ்வளவு அழகியல்தன்மையோடு எழுதியுள்ளார்” என்று பாராட்டி
பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
காலம் காலமாக ஆஜான் செய்து வருவது தனது திமிர்த்தனமான பதிவுகள் மூலம் அவதூறு மட்டுமே. அதற்கான
எதிர்வினை வரும் போது அவரால் தாங்க முடியவில்லை. அவதூறு செய்யப்பட்டவர் எப்படிப்பட்ட எதிர்வினையை கையாள வேண்டும் என்று சொல்லும் அருகதை இவருக்கு கிடையாது.
எழுத்தாளர்களுக்கு முத்திரை கொடுக்கும் இலக்கிய அத்தாரிட்டி
இவர் கிடையாது. மக்களுக்கு கொஞ்சமும் பயனில்லாத குப்பைகளை அழகியலோடு எழுதுவதால்
அது இலக்கியமாகாது என்று இவரை நிராகரிக்கவும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது.
தான்தான் ஒரு சாதாரண மொன்னை முச்சந்தி எழுத்தாளர் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் புளிச்ச மாவு பிரபல ஆஜான்.
தமிழின் முதன்மையான எழுத்தாளர் என்று இவர் தன்னை சொல்லிக்
கொள்கிறார். ஆனால் குண்டர் படை வைத்திருக்கிற இலக்கிய தாதா இவர்தான். இவரது பதிவை இவரது
குண்டர்கள் ஆவேசமாக பகிர்ந்து கொண்டு
பின்னூட்டம் போட்டு தங்கள் விசுவாசத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாகித்ய அகாடமி விருதுக்கான விசுவாசத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார். அது நாளை.
No comments:
Post a Comment