Sunday, November 22, 2020

ஆஜானுக்குப் பதில் லச்சூ . . .

 


"சமீப காலமாக இலக்கியவாதிகளின் பிரார்த்தனை என்பது ஜெயமோகன் உயிரோடு இருக்கிற வரை தாங்கள் இறக்கக் கூடாது" 

என்பதாகவே உள்ளதாக ஒரு பதிவை சில வருடங்கள் முன்பாக எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்த போது அவரை இழிவு படுத்தி ஜெயமோகன் எழுதியதற்கான எதிர்வினையாக பார்த்தேன்.

இன்று சுந்தர ராமசாமிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தமுஎகச வை இழிவு படுத்திய ஆஜானே இரண்டு மாதங்களுக்கு முன்பாக கொவை ஞானிக்கு அஞ்சலி என்ற பெயரில் சுரா வுடன் தனக்கிருந்த அத்தனை பகைமைகளையும் கொட்டித் தீர்த்திருந்தார் என்பது வேறு விஷயம்.

சமீபத்தில் மறைந்த க்ரியா பதிப்பக திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஜெமோ ஏதாவது அஞ்சலி எழுதியுள்ளாரா என்று பார்க்கப் போனேன். அவர் எதுவும் எழுதவில்லை. 

அந்த குறையை அவர் குண்டர் படையின் பிரதான குண்டர் லச்சுமி மணிவண்ணன் தீர்த்து விட்டார்.

ஆஜானின் ஞான மரபுப் பாரம்பரியத்தை பாதுகாத்த அவரது அஞ்சலி செய்தியை அவசியம் படியுங்கள்.

க்ரியா ராமகிருஷ்ணனுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய மரணம் துரதிர்ஷ்டவசமானது.

 மேட்டிமை  எண்ணம்  தங்களுக்கு  இருப்பதை  அறியாத, உணராத , அறிவதற்கான வாசல்களைத் திறந்து கொள்ளாத பெரிய மனிதர்கள் பலர் உண்டு.அவரும் அவர்களுள் ஒருவர். நிச்சயமாக பெரிய மனிதர். உயர்வாழ்வு வாழ்ந்தவர் .அதில் ஐயமில்லை

 அவர் பதிப்பில் தங்கள் நூல்கள் வெளிவரவேண்டும் என்கிற ஆசையை அவர் சூழலில் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது. எனக்கு ஏற்பட்டதில்லை. பாதித்த  சமகால படைப்பாளிகள்  ஒருவரைக் கூட அணுகி அவர் பதிப்பில் வெளியிட ,அவருடைய ஆணவம் இடங்கொடுத்ததில்லை. நூல் பதிப்பில் அந்த  ஆணவம் போற்றுதலுக்குரியதல்ல. மட்டுமல்லாமல்  அவருடைய பதிப்பு முறைமையே  பிழையானது. ஒப்பிட்டால்  அன்னம் மீரா அளவிற்கெல்லாம் கூட இவர் நவீன தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தவரல்ல

ஒருவரின் மரணத்தை முன்வைத்து பிறபதிப்பாளர்களை மிகை மதிப்பீட்டால் சிறுமை  செய்ய  வேண்டியதில்லை

அவர் பதிப்பித்த நூல்களில் பெயின்ட் மணம் தூக்கலாக இருந்தது உண்மையே. க்ரியாவின் பல நூல்கள்  நிதியுதவி  பேரில் பதிப்பிக்கப்பட்டவை. பிரஞ்சு, ஜெர்மன் மொழிகளுடன்  அவருக்கு  நிதியுதவி அடிப்படையிலான உறவே இருந்தது. அதனை நான் தவறு காணவில்லை. ஆனால் சிறந்த பதிப்பாளன் அதற்கு வெளியிலும்  செயல்  கொண்டவன்.

தற்போது  அவருடைய  மரணத்தை  முன்வைத்து  அவரைப் பதிப்புச்செம்மல் என்பது  சுத்த  நான்சென்ஸ்

அவர் மரணம் வருத்தத்திற்குரியது. அவர் தம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது ஆன்மா அமைதி பெறட்டும்

அதற்கு ஒருவர் பின்வரும் பின்னூட்டத்தை எழுதினார். 

க்ரியா தமிழ் அகராதி அவர் தமிழுக்கு் வழங்கிய கொடை

 லச்சூ அவரையும் கடித்து குதறி விட்டார்

இல்லையென்று சொல்லவில்லை. முதல்முறையாக  ஒரு அகராதி  துணை தேவை  என  உணர்பவர்களுக்கு  அது ஆச்சரியமே. பின்னாட்களில்  அது  போல சில வட்டார அகராதிகள் உருவாகவும்  அது  உதவிற்று. ஆனால்  பதிப்பு  மேதை என்பதற்கு அது மாத்திரம் போதுமா ? அவர் நட்பு, நிதி  இரண்டுக்கும்  வெளியில் பதிப்பதையே அறியாதவர். காரணம் குறுகல் தான். மெல்லிய விமர்சனங்களையும் தாங்க இயலாதவர். நினைவில் ஏற்றுபவர். வஞ்சம் கட்டுபவர். இதுவெல்லாம்  இருக்கட்டும். தனிப்பட்டவை .நட்பிற்கு  வெளியில் சமகால  எழுத்தாளர்கள்  எவரையேனும்  பதிப்பித்திருக்கிறாரா?

பாவம் அவர், 

உண்மை என்று லச்சூ சொன்னதை ஒப்புக் கொண்டு விட்டார்.

இதுதான் இவர்களின் கண்ணியம், அறம், அழகியல் . . .

பிகு: இதற்கு பதிலளித்து ஒரு பதிவு எழுத முடியும். நேரமில்லாத காரணத்தால் அவற்றை பெரிய எழுத்தில் கருப்பு நிறத்தில் பிரசுரித்து 



"அது குரங்கு பொம்மை இல்லை, கண்ணாடி" என்ற வடிவேலு பட மீமை மட்டும் நினைவு படுத்தி முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment