Tuesday, November 10, 2020

அப்போது மறந்து போனதா சோ.தர்மன் சார்

 


 

கீழே உள்ளது தமுஎகச பற்றி சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு சோ.தர்மன் எழுதிய பின்னூட்டம்.

 


தமுஎகச பற்றி நாற்பதாண்டுகளாக கடுமையாக எழுதி வருகிற திரு தர்மன் அவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்க வேண்டும். என்ன நிகழ்வு என்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

 


ஒரு பினாமி அமைப்பு, பயில்வான்கள் சங்கம் உங்களைப் பாராட்டி சால்வை அணிவிக்க வருகிற போது ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்? அதிலும் அவர்கள் குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஏன் முதல் நபராக கையெழுத்து போட்டீர்கள்? அதற்காக ரொம்பவும் மகிழ்ச்சி வேறு அடைந்துள்ளீர்கள்.

 நாற்பதாண்டுகளாக மேடைகளிலும் நேர் காணல்களிலும் உங்கள் பினாமி அமைப்பை கடுமையாக விமர்சித்து வருகிறேன். உங்கள் கட்சி இதழ்களிலும் ஒரு முறை கூட எழுதியதே கிடையாது. என்னை கௌரவிக்க உங்களுக்கு தகுதி கிடையாது என்று துரத்தி அடித்திருக்க வேண்டியதுதானே சார்?

 ஏன் சார்?

 கோவில்பட்டிக்காரர் தமிழ்ச்செல்வன் வந்தார், அதனால் சால்வையை பெற்றுக் கொண்டேன் என்று நீங்கள் சொன்னால் அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

 அந்த அமைப்பு தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் ஏன் முதல் கையெழுத்து போட்டீர்கள்?

 பினாமி அமைப்பு, பயில்வான்கள் சங்கம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு என் ஆதரவு கிடையாது என்று மறுத்திருக்கலாமே!

 அதெல்லாம் அப்போது மறந்து போய் விட்டதா சார்?

 உங்கள் நூலுக்கு அணிந்துரை எழுதிய ஜெயமோகனுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று விருதை பறித்து விடுவோம் என்று அவரது குண்டரடிப் பொடிகள் யாராவது மிரட்டினார்களா சார்?

 உங்கள் “சூல்” நாவலிலும் அறம் இல்லை. உங்களிடமும் கூட

 பிகு : அது ஏன் சார் பயில்வான்கள் சங்கம் என்று பெயர்? எனக்கு தெரிந்து தமுஎகச பொறுப்பாளர்கள் யாருமே உங்களைப் போல முரட்டுத் தோற்றத்துடன் இல்லையே!



 பிகு 2 : அப்புறம் ஜெமோவின் பிரதான குண்டர் லச்சுமி மணிவண்ணனையோ அல்லது ஏன் புளிச்ச மாவு ஆஜானையோ தமுஎகச தோழர் அ.கரீம் தொகுத்த “இருண்ட காலக் கதைகள்” நூலில்  உள்ள ஒரே ஒரு சிறுகதை போல எழுதச் சொல்லுங்கள். அந்த நூலில் உள்ள பெரும்பாலான படைப்புக்களை எழுதியவர்கள் தமுஎகச அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். அந்த ஒரு நூல் சொல்லும் தமுஎகச வின் இலக்கியத்தரம் என்ன என்பதை. அவர்கள் மக்களுக்கான படைப்பாளிகள். மக்களுக்கு எதிரான சங்கிகளால் அவர்களை வசை பாடத்தான் முடியும். அழகியல் குப்பைகளால் மக்களின் துயரத்தை பேச முடியாது. மக்களின் துயரத்தைப் பற்றி கவலைப்படாதவன் படைப்பாளி கிடையாது, புளிச்ச மாவு ஆஜான் உட்பட.

No comments:

Post a Comment