“நான் ஆட்சிக்கு வந்தால்
பீஹாரில் சம்பரன் பகுதியில் உள்ள மூடிக்கிடக்கும் சர்க்கரை ஆலைகளை திறப்பேன். அந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையை கலந்துதான்
டீ குடிப்பேன்” என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னார். ஆனால் எந்த ஒரு மூடப்பட்ட சர்க்கரை ஆலையும் திறக்கப்படவில்லை. இப்போது மீண்டும் அந்த பகுதிக்கு வந்துள்ள மோடி எந்த சர்க்கரை
சேர்த்து டீ குடிப்பார்?
இது பீகாரில் தேஜஸ்வி யாதவ் கேட்டுள்ள கேள்வி.
சொன்ன வார்த்தையை தவறாமல் இருக்க மோடி என்ன “ஜெய்ஹிந்த் கோட்டைச்சாமியா?”
தம்பி தேஜஸ்வி யாதவ், மோடிக்கு சுகர் வந்திருக்கும்.
சர்க்கரை ஆலையை திறந்து அது உற்பத்தி செய்த சர்க்கரையை சேர்த்து டீ குடிச்சா,
மோடியோட சர்க்கரை அளவு அதிகமாகிடாதா?
அது மட்டுமல்லாமல் அந்த ஆலைகள் திறந்து அந்த சர்க்கரையை மத்தவங்க
சேர்த்தால் அவங்களுக்கும் சுகர் வந்துரக் கூடாதில்ல.
அந்த நல்லெண்ணத்திலதான் அவர் தேர்தல் வாக்குறுதியை
மறந்துட்டாரு. அதை போய் பெரிய விஷயமா பேசறீங்களே தம்பி…
அந்த சர்க்கரை ஆலை தொழிலாளிங்க, கரும்பு விவசாயிகள் நிலை?
அவங்க என்ன அம்பானியா இல்லை அதானியா? அவங்களைப் பத்தி எல்லாம்
மோடி கவலைப்பட முடியுங்களா?
நீங்க சொன்ன பத்து லட்சம் வேலைகளே வாய்ப்பில்லைன்னு
சொல்லிட்டாரு!
அதனால தேர்தலில் ஜெயிச்சு பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, தேர்தல் வாக்குறுதி என்பது நிறைவேற்றத்தான் என்று மோடிக்கு தலையில குட்டி உணர்த்துப்பா . . .
No comments:
Post a Comment