Thursday, November 5, 2020

எடை குறைப்பால் தோஷம் நீக்க . .

 



பக்கத்து இருக்கை மாணவனின் உணவை
தின்றவன் சொன்னான் "எடைக் குறைப்பு"

சாலையில் சென்ற பெண்ணின் 

கழுத்து நகையை பறித்தவன் சொன்னன்
"திருட்டல்ல. அவர் கழுத்திலிருந்த எடையைக் குறைத்தேன்"

பேருந்தில் பர்ஸை அடித்தவனும் சொன்னான்,
"நான் பிக் பாக்கெட் அல்ல, மனிதர்களின் எடை குறைப்பவன்"

"நான் லஞ்சம் வாங்கவில்லை.
அவர் வசம் இருந்த நிதியின் எடை குறைத்தேன்"
வாக்குமூலம் கொடுத்தான் ஊழல் பேர்வழி

மோசடிகள் செய்த அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல, எடை குறைப்பாளர்கள்.




குழம்பிப் போன போலீஸ்

தோஷம் நீக்க புறப்பட்டது ராமேஸ்வரத்திற்கு


No comments:

Post a Comment