அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
என்னுடைய புதிய முயற்சி பாதாம் பால் கேக்.
முதல் நாள் இரவு ஊற வைத்த பாதாம் பருப்புக்களின் தோலை நீக்கி மீண்டும் ஒரு அரை மணி நேரம் சுடு நீரில் ஊற வைத்தேன். பிறகு காய்ச்சிய பாலோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொண்டேன்.
இந்த கலவை அளவிற்கு ஒன்றரை மடங்கு போல (அதாங்க, உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு அளவு கொள்முதல் விலை நிர்ணயிப்பதாக விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்து ஒருவர் ஏமாற்றினாரே, அந்த அளவு) சர்க்கரையை வாணலியில் போட்டு இந்த கலவையோடு கிளறிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே தயாராக இருந்த சர்க்கரை சேர்க்காத பால் கோவையையும் போடு கிளறுவதை தொடர வேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக இறுகி வரும் நேரத்தில் ஒரு தட்டில் கொட்டி வில்லை போட்டு எடுத்தால் பாதாம் பால் கேக் ரெடி . . .
பிகு: இதை அப்படியே முடித்தால் நான் மனசாட்சியற்றவன் ஆகி விடுவேன். வில்லை போடவே வரவில்லை. பிறகு இன்னும் கொஞ்ச நேரம் என் மனைவி அடுப்பிலேற்றி கிளறிய பின்புதான் கேக் வடிவம் கிடைத்தது.
இல்லையென்றால் அது அல்வாதான்.
நான் இனிப்பின் வடிவத்தைச் சொன்னேன்.
No comments:
Post a Comment