தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவரும் எழுத்தாளரும், கள செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.
அப்பதிவை தமுஎகச அமைப்பினை "மாபியா கும்பல்" என்று சொல்லி தன் வக்கிரத்தை தணித்துக் கொண்ட் புளிச்ச மாவு புகழ் ஆஜானுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தமுஎகசவின் செயல்பாடு யாருக்கானது என்பதை திரு பெருமாள்முருகன் அவர்களின் சமர்ப்பணம் உணர்த்தும்.
தோழர் ஆதவன் தீட்சண்யா அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸ் என்பது ஆஜானின் எந்த ஒரு படைப்பு குறித்துமானதல்ல. ஒரு அமைப்பை இழிவு படுத்தி அதன் பொதுச்செயலாளர் மீது கொலைப்பழி சுமத்திய கீழ்த்தரமான செயலுக்குத்தான்.
தர்மபுரியில் ஆஜான் தொலைபேசியில் பணியாற்றிய போது ஏதோ பிரச்சினையில் அடி வாங்காமல் அவரைக் காப்பாற்றி மாறுதல் வாங்கிக் கொடுத்து அனுப்பியது தோழர் ஆதவன் தீட்சண்யாதான். இந்த சூழலிலும் கூட அதையெல்லாம் சொல்லாமல் பெருந்தன்மையாக இருக்கிறார் அவர். ஏனென்றால் அதுதான் தமுஎகச அமைப்பின் தரம், உண்மையான அறம்.
இதோ தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு
தோழர் பெருமாள் முருகனின் புதிய சிறுகதைத்தொகுப்பை எனக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அவருடைய இணையர் கவிஞர் எழிலரசி அவருடைய கவிதைத்தொகுப்பை எனக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். இருவரின் பேரன்பில் நெகிழ்கிறேன். இக்குடும்பமே நெருக்கடியில் நின்ற நாட்கள் எப்போது நினைத்தாலும் வேதனை படரும்.இந்தப் பேரன்பை எமை இயக்கும் எங்கள் அன்பின் வடிவமாகத் திகழும் தமுஎகச இயக்கத்திடம் கையளிக்கிறேன்- எனக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு....
.தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவையும் நூல்களின் சமர்ப்பணம் பகுதியையும் படிக்கையில் மனதிற்கு நெகிழ்ச்சியாகவே இருந்தது.
"எழுத்தாளன் பெருமாள்முருகன் இறந்து விட்டான்" என்ற வலி மிகுந்த வார்த்தைகள் மாறிப்போனதன் அடையாளமல்லவா இந்த நூல்கள்!
நீதிமன்றத்திலும் வீதிமன்றத்திலும் தமுஎகச நடத்திய போராட்டத்தின் வெற்றிதானே இந்த மாற்றம்!
இந்த அமைப்பை கொச்சைப்படுத்தியவர்க்ளை எப்படி மறக்க முடியும்? மன்னிக்க முடியும்?
அவர்களை, அவர்களின் ஆணவத்தை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமல்லவா!
அதனால் அடுத்த பதிவு
ஆஜானுக்கு பதில் லச்சூ
No comments:
Post a Comment