இந்தியா உலக வல்லரசாவதற்கு மோடிஜீ பல்வேறு திட்டங்களை வைத்திருந்தார்
அந்த திட்டங்களை அமல்படுத்த அவர் நினைத்தபோது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் குறுக்கீடாக இருப்பதை உணர்ந்தார்.
ட்ரம்ப்பை வீழ்த்திவிட்டால் மோடிஜீதான் உலகின் பவர்புல் லீடராக முடியும் என்பதை கணித்தார்.அதற்காக திட்டமிட்டார். ஜோ பைடனுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழச்சி கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதியாக நியமிக்க சொன்னார். பைடன் ஜீ உடனே மோடிஜீயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.
திட்டங்கள் அனைத்தும் அமித்ஷா ஜீ கட்டுப்பாட்டில் விடப்பட்டது. இதற்காக இரண்டு முறை அமித்ஜீ எய்ம்ஸ்க்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு இரகசியமாக அமெரிக்காவிற்கு சென்றார். அங்குள்ள இந்திய மக்களை திரட்டி பைடனுக்கு ஆதரவாக வாக்களிக்கசொன்னார். இதெல்லாம் ரகசியக்கூட்டம்.
கொரோனோ காலம் என்பதால் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. ட்ரம்ப் தான் தான் ஜெயிக்கப்போகிறோம் என்ற மிதப்பில் இருந்தார்.ஆனால், மோடி ஜீயின் கேம் பிளான் தெரியாததால் ஆணவமாக பேசினார்.
தேர்தல் நாள் அன்று மோடிஜீ ஒவ்வொரு இந்திய அமெரிக்கரிடமும் போனில் பேசினார். பைடனுக்கு வாக்களிக்க சொன்னார். ஜீ பேச்சுக்கு மறுப்பேச்சு ஏது? மக்கள் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது பைடன் பின் தங்கினார். பதறியபடி மோடி ஜீக்கு போன்செய்தார் பைடன் ஜீ...
மோடி ஜீ சிரித்தபடியே வெயிட் அண்ட் சீ என்றார்.
மிகப்பெரிய ராஜதந்திரியான மோடிஜீயின் திட்டம் புரியாமல் பைடன் குழம்பிக்கொண்டிருந்தார். சில நாட்களில் பைடன் ஜீயும் கமலா ஜீயும் முன்னுக்கு வந்தனர். நேற்று அவர்கள் ஜெயித்த உடன் முதல் போன் நம்ம ஜீக்குத்தான் பேசினார்கள்.
இந்த விவரங்களை பின்னர் தெரிந்துகொண்ட ட்ரம்ப் நம்ம ஜீக்கு போன் போட்டு, மை பிரண்ட் மோடி..எனக்கு ஏன் ஆதரவு நீங்க தரலனு கேட்டு கண்ணீர்விட்டு அழுதார்.
நம்ம ஜீ கெத்தா, ட்ரம்ப்பை பார்த்து, நான் தலை..நீ வாலு..தலையிருக்க வால் ஆடக்கூடாது. நீ ஓவரா ஆடிட்ட.. அதான் நான் முடிச்சிட்டேன் என்றார்.
மோடி ஜீ பவர் புரியாமல் ஓவரா ஆடிட்டேன்னு ட்ர்ம்ப் நேற்று ராத்திரி முழுக்க கதறி அழுத்துட்டிருந்திருக்கார்.
அமித்ஜீயும் மோடிஜீயும் உலகத்தை தன் கட்டுப்பாட்ல கொண்டாந்துட்டாங்க..
இதான் மோடிஜீயின் மங்கத்தா!
பாரத் மாத்தாக்கீ..ஜே...!
வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் பதிவு
May be true?!!...but the imagination is really enjoyable
ReplyDelete